பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனம், திட்டப் பொறியாளர் (Project Engineer) மற்றும் திட்ட அலுவலர் (Project Officer) பணிகளுக்கான ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், 1970ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு பொதுத்துறை நிறுவனமாக இணைக்கப்பட்டது.
இந்நிறுவனம் இந்திய ஆயுதப் படைகளுக்கான ஏவுகணை அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களைத் தயாரிக்கிறது. தற்பொழுது இந்நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும்,
Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உதவி மேலாளர், துணை மேலாளர் ஆகிய பணிகளில் மொத்தமாக 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியுள்ளவர்கள்
Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
உதவி மேலாளர் மற்றும் துணை மேலாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 28 முதல் 35 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு
Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து குறிப்பிட்ட பாடப்பிரிவில் முதல் வகுப்பு இளங்கலைப் பட்டம் (Bachelor Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு
Notification அறிவிப்பை பார்க்கவும்.
- உதவி மேலாளர் மற்றும் துணை மேலாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் முதலில் bdl-india.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- ஆன்லைன் பதிவு இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலுடன் அனைத்து கட்டாய ஆவணங்களும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
- பதிவு எண்ணை குறித்து வைத்து பதிவு சீட்டை பிரிண்ட் எடுக்கவும்.
- ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் ‘பயோ-டேட்டா படிவத்தை’ பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
- தபால் மூலம் அனைத்து கட்டாய ஆவணங்களையும் இணைத்து, முறையாக பூர்த்தி செய்யப்பட்ட ‘பயோ-டேட்டா படிவத்துடன்’ பதிவு சீட்டை அனுப்பவும்.
- அனுப்ப வேண்டிய முகவரி : SM, C-HR (TA&CP), Bharat Dynamics Limited, Corporate Office, Plot No. 38-39, TSFC Building (Near ICICI Towers), Financial District, Gachibowli, Hyderabad, Telangana-500032.
- மேலும் விண்ணப்பம் அடங்கிய தபால் உறை மீது தடிமனான எழுத்துக்களில் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு எழுத வேண்டும்.
- பின், விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / PwBD / முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் மற்றும் கடைசி தேதி:
உதவி மேலாளர் மற்றும் துணை மேலாளர் ஆகிய பணிகளுக்கு ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 17ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.