தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், (TNPSC) பல்வேறு துணைப் பணிகளில் ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளுக்கு ஆட்கள் வேண்டும் என அறிவித்துள்ளது. அடிக்கடி (TNPSC) ஆட்சேர்புக்கான அறிவிப்பை வெளியீட்டு வரும் நிலையில், தற்போது பல பதவிகளுக்கு ஆட்சேர்பு நடைபெறுவதாக அறிவித்துள்ளது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
பதவியின் பெயர் காலியிடங்கள்
வயது வரம்பு
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள் மற்றும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள்.
Research Assistant in Statistics
Research Assistant in Economics
Research Assistant in Geography
Research Assistant in Sociology
Research Assistant in Evaluation and Applied Research Department
விண்ணப்பதாரர்கள் பொருளாதாரம் அல்லது பொருளாதாரவியல் அல்லது புள்ளியியல் அல்லது வணிக நிர்வாகம் அல்லது கணிதம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மானுடவியல் அல்லது விவசாய பொருளாதாரம் அல்லது பொது நிர்வாகத்தில் முதல் வகுப்பு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
மேற்கண்ட பதவிகளில் நேர்காணல் அல்லாத பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36200 முதல் ரூ.133100 வரையிலான ஊதியத்தைப் பெறுவார் மற்றும் நேர்காணல் பதவிக்கான தேர்வு ரூ.36900 முதல் ரூ.116600 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பதவிக்கு நேர்காணல் என்பதை கீழே உள்ள PDF-க்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ஒரு முறை பதிவுக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உரிய ஆவணங்களுடன் அவற்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ= இணையதளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்து இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 25 ஜூலை 2023 இரவு 11:59 மணி வரை மட்டுமே இருப்பதால் அதற்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…