சென்னை துறைமுக அறக்கட்டளை (Chennai Port Trust) காலியாக உள்ள டாக் மாஸ்டர் (Dock Master) வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை துறைமுக அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ள Notification அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
சென்னை துறைமுக அறக்கட்டளையில் டாக் மாஸ்டர் (Dock Master) வேலைக்காக 2 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பதாரரின் வயது மற்றும் தகுதி:
டாக் மாஸ்டர் (Dock Master) வேலைக்காக விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 43 ஆக இருக்கவேண்டும். இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் வழங்கப்பட்ட வெளிநாட்டுக்குச் செல்லும் கப்பலின் மாஸ்டர் என்ற தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
பைலட் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அனைத்து வகையான கப்பல்களையும் கையாள்வதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டு செல்லும் கப்பலில் விமானி அல்லது மாஸ்டர் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது.?
டாக் மாஸ்டர் (Dock Master) வேலையில் சேர ஆர்வம் மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Application Form என்னும் ஆன்லைன் வசதி மூலம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அங்கு கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். அல்லது PDF ல் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி சென்னை துறைமுக ஆணையம், ராஜாஜி சாலை, சென்னை-600001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 07.07.2023 ஆகும். உரிய தேதிக்குள் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். முழுமையான விவரங்களுடன் விண்ணப்பங்களை அனுப்புமாறு விண்ணப்பதாரருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
டாக் மாஸ்டர் (Dock Master) வேலைக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.90,000 முதல் 2,40,000 வரையிலான ஊதியம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு மற்றும் அறிவிப்பை அணுகலாம்.
Official Website : https://www.chennaiport.gov.in/content/careers
Notification : PDF
Online Application : Application Form
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…