Categories: job news

பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.17,500 உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி..! பெல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஒரு நவரத்னா மற்றும் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை மின்னணுவியல், மல்டி-யூனிட், பல தயாரிப்பு  பொதுத்துறை நிறுவனமாகும்.

பெல், பொறியியல் பட்டதாரிகளை, தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் (NATS) கீழ், பெங்களூரு தென் மண்டல பயிற்சி வாரியத்தின் மூலம், தொழிற்பயிற்சியில் (அப்ரண்டிஸ்ஷிப்) பயிற்சிக்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம், பொறியியல்  பட்டதாரிகளை தொழிற்பயிற்சியில் ஈடுபடுத்துவதற்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர் ஒப்பந்த அடிப்படையில் 1 வருட காலத்திற்கு பயிற்சியளிக்கப்படும்.
விண்ணப்பதாரர் வயது:
அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்கள்
  • எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையில் முற்றிலும் தேர்வு செய்யப்படுகிறது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பின் நேர்காணல் நடைபெறும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வரும்பொழுது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை ஒரிஜினலில் ஒரு தொகுப்புடன் கொண்டு வர வேண்டும்.
  • நேர்காணல் முகவரி:

BEL Recruitment

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.17,500 வரை உதவித்தொகையாக வழங்கப்படும்.  இந்த பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும் தேதி ஜூன் 21 மற்றும் ஜூன் 22 ஆகும். அதன் பின் வருவபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அலுவலகத்திற்கு செல்லும் வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CLD ROUTE MAP : Map

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago