Categories: job newslatest news

அர்ச்சகர் ஆக வேண்டுமா?..இதோ உங்களுக்கான ஒரு வாய்ப்பு..உடனே அப்ளை பண்ணுங்க..

திருச்சி மாவட்டம் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சான்றிதழுடன் கூடிய அர்ச்சகர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே http://www.hrce.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும். இந்த விண்ணப்பங்களை வருகின்ற ஜுன் 19 ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே அனுப்ப முடியும்.

பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள்:

இப்பயிற்சியில் சேர விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருத்தல் அவசியம். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்து வைணவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் அவசியம்.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 14 வயதினையும் அதிகபட்சமான 24 வயதினையும் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

பயிற்சியின் சிறப்புகள்:

  1. பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி படிக்கலாம்.
  2. உணவு, சீருடை, உறைவிடம் மற்றும் பயிற்சி காலத்தில் ஊக்க தொகையாக ரூ. 3000 வழக்கப்படும்.
  3. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/ செயல் அலுவலர்

அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில்

ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி- 620006.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும்.

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/36/document_1.pdf

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago