job news
B.Com முடித்தவர்களா நீங்கள்..? மாதம் ரூ.12,500 வரை சம்பளம்..பெல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஒரு நவரத்னா மற்றும் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை மின்னணுவியல், மல்டி-யூனிட், பல தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமாகும்.
BEL, பொறியியல் அல்லாத பட்டதாரிகளை, தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் (NATS) கீழ், சென்னையின் தென் மண்டல பயிற்சி வாரியத்தின் மூலம், அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம், பொறியியல் அல்லாத பட்டதாரிகளை அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சியில் ஈடுபடுத்துவதற்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர் ஒப்பந்த அடிப்படையில் 1 வருட காலத்திற்கு பயிற்சியளிக்கப்படும்.
விண்ணப்பதாரர் வயது:
பொறியியல் அல்லாத பட்டதாரிகளை அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து வணிகவியல் இளங்கலை (B.Com), வணிக நிர்வாக இளங்கலை (BBA) முடித்திருக்க வேண்டும்.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
- பட்டம்/தற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்கள்
- எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையில் முற்றிலும் தேர்வு செய்யப்படுகிறது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பின் நேர்காணல் நடைபெறும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வரும்பொழுது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை ஒரிஜினலில் ஒரு தொகுப்புடன் கொண்டு வர வேண்டும்.