Categories: job news

பி.இ தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? 50,000 சம்பளத்தில் அட்டகாசமான மத்திய அரசு வேலை..!

நவரத்னா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் உள்ள திட்ட தளங்களில் அதன் ஏவுகணை அமைப்புகள் எஸ்பியு-க்கு (SBU) தற்காலிக அடிப்படையில் திட்ட பொறியாளர்-I வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை நிறுவனம் வரவேற்கிறது.

மேலும் தகவல்களுக்கு www.bel.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

தற்பொழுது இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திட்ட பொறியாளர்-I வேலைக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பதாரரின் வயது:

இந்த வேலையில் சேருவதற்கு ஆர்வத்துடன் விண்ணப்பிக்க விரும்புபவரின் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு PDF என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி:

இந்த வேலையில் சேர விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்/ டெலிகம்யூனிகேஷன் / கம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் பிஇ / பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை இடங்கள்:

குறிப்பிடப்பட்டுள்ள வேலைக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் லே, அவந்திபூர் , பதான்கோட் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

சம்பள விவரம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் முதல் வருடம் ரூ.440,000/- ஆகவும், 2ம் வருடம் ரூ.45,000/- ஆகவும், 3ம் வருடம்  ரூ.50,000/- ஆகவும் இருக்கும். நேரடியாக திட்டப் பொறியாளர்–II வேலையில் சேரும் விண்ணப்பதாரர்களின் ஊதியம் முதல் வருடம் ரூ.45.000/- ஆகவும், 2ம் வருடம் ரூ.50,000/- ஆகவும், 3ம் வருடம்  ரூ.55,000/- ஆகவும் இருக்கும். மேலும் இது குறித்த விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு PDF க்குச் சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஒப்பந்த காலம்:

திட்டப் பொறியாளர் வேலையில் சேருபவர் ஆரம்பத்தில் சேர்ந்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பணிபுரிய வேண்டும். திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் விண்ணப்பதாரரின் செயல்திறனைப் பொறுத்து இது அதிகபட்சமாக மேலும் ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படலாம். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் பயிற்சிப் பொறியியலாளராக மூன்று வருட பதவிக் காலத்தை பூர்த்தி செய்து, திட்டப் பொறியாளர் வேலைக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர் நேரடியாக திட்டப் பொறியாளர் –II வேலையில் சேர்க்கப்படுவார்.

தேர்வு முறை:

திட்டப் பொறியாளர் வேலைக்கு விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார். அதைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே நேர்காணல் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு / நேர்காணல் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

இந்த எழுத்துத் தேர்வு/நேர்காணல் மற்றும் இறுதித் தேர்வுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள் www.bel.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வு/நேர்காணல் அழைப்புக் கடிதங்கள் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும் என்பதை நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

திட்டப் பொறியாளர் வேலையில் சேர ஆர்வம் மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Application Form என்னும் ஆன்லைன் வசதி மூலம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அங்கு கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

திட்டப் பொறியாளர் வேலையில் சேர விண்ணப்பிப்பவர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். இதனை www.bel.com இணையதளத்தில் உள்ள கட்டண இணைப்பைக் கிளிக் ஆன்லைன் முறை அல்லது எஸ்பிஐ மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:

இந்த பணியில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 8 வரை உள்ளது. எனவே, இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் தங்களது திறமைகளை சற்று வளர்த்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இது குறித்த தகவல்களுக்கு PDF -ஐக் காணலாம்.

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago