இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியான பரோடா வங்கி ( BOB) சமீபத்தில் வேலைவாய்ப்புகான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ( BOB) வங்கி வணிக நிருபர் மேற்பார்வையாளர்கள் (Business Correspondent Supervisors) பணிக்கு ஆட்கள் தேவை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, இந்த பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
பதவியின் பெயர் காலியிடங்கள்
வங்கி வணிக நிருபர் மேற்பார்வையாளர்கள் (Business Correspondent Supervisors) பணிக்கு மொத்தமாக 5 காலியிடங்கள் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
மேற்கண்ட வணிக நிருபர் மேற்பார்வையாளர்கள் (Business Correspondent Supervisors) பணியில் பணிபுரிய விரும்பும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc (IT)/ BE(IT)/ MCA/MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்த வணிக நிருபர் மேற்பார்வையாளர்கள் (Business Correspondent Supervisors) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 63 வயதாக இருக்கவேண்டும் என வங்கி அறிவித்துள்ளது.
சம்பள விவரம்
இந்த பணிக்கு நீங்கள் சேர விண்ணப்பம் செய்தீர்கள் என்றால், அதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ.15,000/- ஊதியம் வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் வைத்து அதன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கான விவரங்கள் இந்த https://docs.google.com/document/d/1uWmMiIkTA0c1ovU0zrc_-mhuQtwWnwU5/edit?pli=1 ல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவேம் அதனை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க முறை
இந்த வணிக நிருபர் மேற்பார்வையாளர்கள் (Business Correspondent Supervisors) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், விருப்பமும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bankofbaroda.in/ க்கு சென்று அங்கு கொடுப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்யவேண்டும். சரியான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்துவிட்டு ஒருமுறை சரியாக விண்ணப்பம் செய்துள்ளீர்களா..? என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதிக்கு முன் அனுப்புங்கள்.
முகவரி – Regional Office, Bangalore North, 4th Floor, Vijaya Towers, 41/2 1
fl.G.Road, Bangalore-560001
மேலும் விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி (18.07.2023) என்பதால் விண்ணப்பதாரர்கள் அதற்கு முன்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…