பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) இந்தியாவின் முதன்மையான பொறியியல் அமைப்பு, இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம், தொழில், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு போன்ற உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
பிஹெச்இஎல், மின் துறை – தென் மண்டலம், யதாத்ரி டிபிஎஸ் திட்டத்திற்கு, சிவில் துறையில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட், சிவில் துறையில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்ட வேலை பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு ஆணையம் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
பொறியாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர் சிவில் இன்ஜினியரிங்/தொழில்நுட்பத்தில் முழுநேர இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜியில் 5 ஆண்டுகள் இணைந்த முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்பார்வையாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் முழுநேர டிப்ளமோவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் மின் உற்பத்தி நிலையங்கள், எஃகு ஆலைகள், சிமென்ட் ஆலை, சுத்திகரிப்பு ஆலைகள், பெட்ரோ-கெமிக்கல்ஸ் போன்ற துறையில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக்கட்டணம்:
பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்தவேண்டும். விண்ணப்பக்கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
பொறியாளர் பதவிக்கு நியமிக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.46,130 மற்றும் மேற்பார்வையாளர்கள் பதவிக்கு விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.82,620 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 8 ஆகும். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…