job news
பட்டதாரிகளா நீங்கள்..? இந்திய மசாலா வாரியத்தில் நேர்காணல் முறையில் வேலை..! உடனே கிளம்புங்க..
இந்தியாவில் விளையும் ஏலக்காய், மிளகு போன்ற நறுமணப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைப் பணிகளுக்கான தனி அமைப்பாகஇந்திய மசாலா வாரியம் (Spices Board of India) இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளது.
இந்திய மசாலா வாரியத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
இந்திய மசாலா வாரியத்தில் காலியாக உள்ள பயிற்சி ஆய்வாளர் (Trainee Analyst) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
பயிற்சி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆகும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
வேதியியலை பாடத்தில் ஒன்றாகக் கொண்ட இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு சமமான வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை மற்றும் சம்பள விவரம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்படுவார். இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.20,000 சம்பளமாக வழங்கப்படும்.
நேர்காணல் தேதி:
பயிற்சி ஆய்வாளர் பணிக்கு ஜூலை 4ம் தேதி தர மதிப்பீட்டு ஆய்வகம், ஸ்பைசஸ் போர்டு, சுட்டுகுண்டா மையம், ஜி.டி. சாலை, குண்டூர், ஆந்திரப் பிரதேசம் 522004 நேர்காணல் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.