Connect with us

job news

நர்சிங்கில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? உங்களுக்காக காத்திருக்கிறது என்எல்சி நிறுவனத்தில் வேலை..!

Published

on

NLC Job

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC) நிறுவனம் தமிழ்நாட்டின் நெய்வேலியில் உள்ள பொது மருத்துவமனைக்கு மூன்று ஆண்டுகளுக்கு நிலையான கால வேலைவாய்ப்பு அடிப்படையில் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்எல்சி நிறுவனத்தில் பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை NLC India Limited என்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.

NLCJobs

காலிப்பணியிடங்கள்:

தற்பொழுது அந்நிறுவனத்தில் ஆண் செவிலியர் உதவியாளர்(36), பெண் நர்சிங் உதவியாளர்(22), மகப்பேறு உதவியாளர்(5), பஞ்சகர்மா (ஆயுர்வேதம்) உதவியாளர்(4), ரேடியோகிராபர்(3), லேப் டெக்னீசியன்(4), டயாலிசிஸ் டெக்னீசியன்(2), அவசர சிகிச்சை நிபுணர்(5), பிசியோதெரபிஸ்ட்(2), செவிலியர்கள்(20) என மொத்தம் 103 பணியிடங்கள் காலியாக உள்ளது.

விண்ணப்பதாரரின் வயது & தகுதி:

10 (SSLC) அல்லது  12ம் (HSC) வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நர்சிங் உதவியாளர் அல்லது பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் படிப்பில் ஒரு வருட பாராமெடிக்கல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பொது நர்சிங் மற்றும் டிப்ளமோவில் துணை செவிலியர் பயிற்சி 2 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எஸ்சி நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 55 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை NLC India Limited காணவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியில் ஆர்வமுள்ளவர்கள் Online Application என்னும் ஆன்லைன் வசதி மூலம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அங்கு கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை சரியாக நிரப்பி விண்ணப்பத்தை பதிவு செய்துகொள்ளலாம்.

மருத்துவத் தகுதி:

ஒவ்வொரு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரரும், நியமிக்கப்படுவதற்கு முன், நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியால் NLCIL-ன் பரிந்துரைக்கப்பட்ட சுகாதாரத் தரங்களின்படி, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்களின் பாட அறிவை சோதிக்க அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் கேட்கப்பட்டு 100 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலத்தில் இருக்கும் மற்றும் 100 அப்ஜெக்டிவ் வகை வினா ஓவ்வொன்றிற்கும்  1 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த தேர்விற்கான நேரம் 120 நிமிடங்கள் ஆகும்.

NLC India Limited

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:

இந்த பணியில் சேருவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய மே 12ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை Online Application இணையத்தளமானது செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

NLC India Limited

விண்ணப்பக்கட்டணம்:

யுஆர்/ஈடபிள்யூஎஸ்/ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.486 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.236 செலுத்த வேண்டும்.

NLC India Limited

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.36,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த பணிக்குறித்த விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு NLC India Limited க்குச் சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

google news