Categories: job news

எம்.எஸ்சி முடித்தவர்களா நீங்கள்..? மாதம் ரூ.35,000 சம்பளத்தில் திருச்சியில் வேலை..! மிஸ் பண்ணிடாதிங்க..

வாழைப்பழத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையம் 21 ஆகஸ்ட் 1993 அன்று திருச்சிராப்பள்ளியில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ICAR) நிறுவப்பட்டது. இது வாழை மற்றும் வாழைப்பழங்களின் உற்பத்தித்தியை ஆராய்ச்சி அணுகுமுறைகள் மூலம் அதிகரிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.

தற்பொழுது, வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் திருச்சியில் (National Research Centre for Banana Trichy) காலியாக உள்ள பணிக்கு ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

பதவி விவரம்:

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் திருச்சியில் (National Research Centre for Banana Trichy) காலியாக இளம் நிபுணர்-II (Young Professional-II) பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 2 பணியிடம் மட்டுமே உள்ளது. தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பதவிக்கான தகுதிகள்:

இளம் நிபுணர்-II பதவிக்கு விண்ணப்பிப்பவர் தோட்டக்கலை / உயிரி தொழில்நுட்பம் / வாழ்க்கை அறிவியலில் எம்.எஸ்சி அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது:

இளம் நிபுணர்-II பதவிக்கு விண்ணப்பிப்பவரின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 45 ஆகவும் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு Notification என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் MS-WORD – TIMES NEW ROMAN FONT – 12 SIZE-ல் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தை நேர்த்தியாக தட்டச்சு செய்து, கல்வித் தகுதிகள், அனுபவம் மற்றும் வெளியீடுகள் போன்றவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் சம்பளம்:

இளம் நிபுணர்-II பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 26 ஆகும். இதற்கு தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.35,000 ஊதியமாக வழங்கப்படும். இது குறித்த மேலும் தகவலுக்கு  Notification அதிகாரபூர்வ அறிவிப்பு அல்லது nrcb.icar.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago