Connect with us

job news

காவல்துறையில் சேர விருப்பமா..? ரெடியா இருங்க..! உங்களுக்காக வருகிறது அறிய வாய்ப்பு..!

Published

on

TNUSRB SI Recruitment 2023

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறையில் காலியாக பணியிடங்களை தேர்வு முறை மூலமாக நிரப்பி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது, காவல் துணை ஆய்வாளர் (Sub Inspector of Police) பணிக்கு காலியாகவுள்ள 621 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

காவல்துறையில் சேருவதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுரைகள்/விதிமுறைகள் மற்றும் விளக்கக் குறிப்புகளை TNUSRB -க்குள் சென்று முழுவதுமாக படித்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காலிப்பணியிடங்கள்: 

காவல் துணை ஆய்வாளர் (தாலுகா) வேலைக்கு 366 பணியிடங்கள், காவல் துணை ஆய்வாளர் (ஏஆர்) வேலைக்கு 145 பணியிடங்கள், காவல் துணை ஆய்வாளர் (டிஎஸ்பி) வேலைக்கு 110 பணியிடங்கள் என மொத்தமாக 621 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNUSRB SI Recruitment

விண்ணப்பதாரரின் வயது:

காவல் துணை ஆய்வாளர் வேலைக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர் 20 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. மேலும், பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி/டிஎன்சி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி மற்றும் திருநங்கைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், முன்னாள் ராணுவ வீரர்கள்/மத்திய ஆயுதக் காவல் படையின் முன்னாள் பணியாளர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 47 ஆகவும் உள்ளது.

TNUSRB SI Recruitment

விண்ணப்பதாரரின் தகுதி:

10 மற்றும் 12ம் வகுப்பு முடித்து பல்கலைக்கழக மானியக் குழு/அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட முறையைப் பின்பற்றாமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பெற மாட்டார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

காவல் துணை ஆய்வாளர் வேலையில் சேர ஆர்வம் மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் TNUSRB என்னும் ஆன்லைன் வசதி மூலம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அங்கு கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

ஹால் டிக்கெட் & தேர்வு முறை:

காவல் துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வு முறை 4 கட்டமாக நடைபெறும். அதில் முதல் கட்டமாக அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் கேட்கப்பட்டு 100 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும். இரண்டாம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் பரிசோதனை நடைபெறும். மூன்றாவதாக விவா (Viva Voce) 10 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

TNUSRB SI Recruitment

இதனை அடுத்து சிறப்பு மதிப்பெண்களாக கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளான என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் விளையாட்டுகளில் அடிப்படையில் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை விண்ணப்பதாரர்கள் TNUSRB இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:

இந்த பணியில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான தேதி ஜூன் 1 முதல் ஜூன் 30ம் தேதி வரை உள்ளது. எனவே, இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் தங்களது திறமைகளை சற்று வளர்த்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தேர்வுக்கான தேதியானது ஆகஸ்ட் 2023 க்குள் அறிவிக்கப்படும்.

TNUSRB SI Recruitment

சம்பள விவரம்:

காவல் துணை ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு TNUSRB க்குச் சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *