திருப்பூர் மாவட்ட சுகாதாரச்சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்களை அளித்துள்ளது. மேலும், இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது எனவும், இரு தரப்பிலும் ஒரு மாத கால அறிவிப்பின் கீழ் ரத்து செய்யக்கூடியவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்காலிகமாக வேலை தேடுபவர்களுக்கு இந்த வேலை சரியாக இருக்கும்.
பெயர் மற்றும் காலியிடங்கள்
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு ( Senior Treatment Supervisor) ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது.
கல்வி தகுதி
காசநோய் சுகாதாரப் பார்வையாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் மருத்துவ சமூகப்பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் உள்ள பல்நோக்கு (MHW ) துப்புரவு சுகாதாரப்பணியாளர் பயிற்சி ஆய்வாளர் பயிற்சி ( SI ) பெற்றவராக இருக்கவேண்டும். மேலும், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு
இந்த முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு ( Senior Treatment Supervisor) பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் உங்களுடைய வயது 65க்குள் இருக்கவேண்டும்.
சம்பள விவரம்
இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.19,800 கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
என்னென்ன சான்றிதழ்கள்..?
இந்த பணியில் வேலைக்கு சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் ( கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை பான் கார்டு, கணிணி சான்றிதழ், முன் அனுபவ சான்று மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ) ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி
துணை இயக்குநர் மருத்துவ பணிகள் ( காசநோய்) மாவட்ட காசநோய் மையம் அறை எண் – 2, கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில், அரசு மருத்துவமனை வளாகம் ( பழைய பேருந்து நிலையம் அருகில்), திருப்பூர் மாவட்டம் – 641604
மேலும் இந்த முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு ( Senior Treatment Supervisor) பணியை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…