Categories: job news

அடிதூள்..மாதம் 2 லட்சம் சம்பளம் தரங்களாம்..! சென்னை துறைமுக ஆணையம் அசத்தல் அறிவிப்பு.!

சென்னை துறைமுக ஆணையம் (Chennai Port Trust) கடல் துறையில் காலியாக உள்ள பைலட் (Pilots) பதவிக்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை துறைமுக ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள Notification அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

கடல் துறையில் பைலட் (Pilots) பதவிக்கு மொத்தமாக 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பதாரர் வயது:

சென்னை துறைமுக ஆணைய பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 47 வயது உடையவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • இந்திய அரசாங்கத்தின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மாஸ்டர் ஆஃப் ஃபாரீன் கோயிங் கப்பலாக தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது,
  • இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
  • வெளிநாடு செல்லும் கப்பலின் முதுநிலை/தலைமை அதிகாரியாக ஒரு வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • பைலட் பதவியில் சேர ஆர்வம் மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் shipmin.nic.in என்னும் ஆன்லைன் வசதி மூலம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்லவேண்டும்.
  • அங்கு இருக்கும் பைலட் பதவிக்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
  • அல்லது Notification அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள தகவல்களை நிரப்ப வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy Conservator,

Marine Department,

Chennai Port Authority

No.1, Rajaji Salai, Chennai – 600 001.

கடைசி நாள்:

விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் தேவையான ஆவணங்களுடன்  ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் தபால் மூலம் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையற்ற விண்ணப்பம் அல்லது முறையான வழியின் மூலம் பெறப்படாத விண்ணப்பங்கள் அல்லது உரிய தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

சம்பள விவரம்:

பைலட் (Pilots) பதவிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.70,000 முதல் 2,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு சென்னை துறைமுக ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள Notification அதிகாரபூர்வ அறிவிப்பை அணுகலாம்

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago