Categories: job news

அடடே சூப்பர்..’IBPS RRB’ வேலைவாய்ப்பு…மிஸ் பண்ணாம விண்ணப்பீங்க மக்களே….

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேர்வு நிறுவனமான Institute of Banking Personnel Selection வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த பணியில் விண்ணப்பம் செய்வதற்கு 21-ம் தேதி கடைசி தேதி தான் கடைசி தேதி என  தெரிவிக்கப்பட்டிருந்து. இதனை தொடர்ந்து தற்போது 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் மற்றும் பணியின் விவரங்கள் 

மொத்தமாக  காலியிடங்களின் எண்ணிக்கை 8285 இலிருந்து 8612 ஆக தற்போது அதிகரித்துள்ளது.

  • Officer Scale – I
  • Law Officer (Grade – II)
  • Agriculture Officer (Grade – II)
  • Officer (Grade III)
  • Law Officer (Grade – II)
  • Chartered Accountant (Grade II)
  • IT Officer (Grade II)
  • Banking Officer Scale – II

வயது வரம்பு

இந்த பணியில் சேர விருப்பம் இருந்தால் உங்களுடைய வயது 18 லிருந்து 32 வயதுக்குள் இருக்கவேண்டும். மேலும், சிலருக்கு வயது வரம்பில் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி 

  • மேற்கான பணிக்குநீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால், நீங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • உதவி மேலாளர் பணிக்கு ‘Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics or Accountancy ‘ துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்ற பதவிகளின் தகவலை இந்த PDF-க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

எப்படி விண்ணப்பிப்பது..? 

  • IBPS இன் அதிகாரப்பூர்வ தளமான ibps.in ஐப் பார்வையிடவும். முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் IBPS RRB ஆட்சேர்ப்பு 2023 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • அதிகாரி அளவுகோல் I, II மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • நீங்களே பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். முடிந்ததும், சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கி, மேலும் தேவைக்காக அதன் கடின நகலை வைத்திருக்கவும்.

மேலும், விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கு முந்தைய பயிற்சி (PET) ஜூலை 17 முதல் 22 வரை நடைபெறும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

மேலும், இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தகவல் 

Application Link –

Office Assistant (Multipurpose) – https://ibpsonline.ibps.in/rrbxiioamy23/

Officers (Scale 1) – https://ibpsonline.ibps.in/crprrb12my23/

Officers (Scale 2 & 3) – https://ibpsonline.ibps.in/crps23may23/

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago