Connect with us

job news

முதியவர்களுக்கான சிறப்பான நிலையான வைப்பு தொகை..கடைசி நாளை நீட்டித்த வங்கிகள்..எதெல்லாம்னு தெரிஞ்சிகனுமா?..

Published

on

special fixed deposit date extended in SBI, HDFC bank

நிலையான வைப்பு தொகை(FD) என்பது அனைவருக்கும் தேவைப்படும் மிக சிறந்த திட்டம் ஆகும். இதில் நாம் செலுத்தும் தொகையானது அதன் முதிர்வு காலத்திற்கு பின் வட்டியுடன் சேர்ந்து நமக்கு திரும்ப வந்து சேரும். இதனை நாம் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் தொடங்கி கொள்ளலாம். ஒவ்வொரு வங்கியும் மூத்த குடிமக்களுக்கான ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த FD திட்டத்தினை கொண்டுள்ளன. தற்போது சில வங்கிகள் தங்களது வங்கிகளில் இந்த கணக்கினை தொடங்குவதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளன. அது என்னென்ன வங்கிகள் என பார்க்கலாம்.

எஸ்.பி.ஐ:

we care and amrit kalash schemes in sbi

we care and amrit kalash schemes in sbi

WE CARE:

பாரத ஸ்டேட் வங்கி தனது வங்கியில் மூத்த குடிமக்களுக்காக WE CARE என்ற நிலையான வைப்பு தொகைக்கான திட்டத்தினை தொடங்கியது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டியும் மற்றவர்களுக்கு 7.10% வட்டியும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 முதல் 10 ஆண்டுகள். செப்டம்பர் 30, 2023 வரை இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்து கொள்ளலாம்.

அம்ரித் கலாஷ்:

இதுவும் பாரத ஸ்டேட் வங்கியின் நிலையான வைப்பு திட்டத்தில் ஒன்றாகும். இதன் மூலம் சாதாரண மக்கள் 3% முதல் 7% வரையிலும் மூத்த குடிமக்கள் 3.5% முதல் 7.5% வரையிலும் வட்டியாக பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆகஸ்ட்,15 2023 வரை நாம் கணக்கினை தொடங்கி கொள்ளலாம்.

எச்.டி.எஃப்.சி வங்கி:

hdfc bank fd schemes

hdfc bank fd schemes

இந்த திட்டத்தினை நாம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் என்ற கால கணக்கில் தொடங்கி கொள்ளலாம். 400 நாட்கள் முதிர்வு காலமாக கொண்ட இந்த  திட்டத்தில் நாம் வட்டியாக 7.75- வரை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் நாம் ஜுலை மாதம் 7ஆம் தேதி வரை தொடங்கி கொள்ளலாம்.

எனவே இந்த மாதிரியான பொன்னான திட்டத்தில் சேர்ந்து நமது பணத்தினை சேமிக்கலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *