நிலையான வைப்பு தொகை(FD) என்பது அனைவருக்கும் தேவைப்படும் மிக சிறந்த திட்டம் ஆகும். இதில் நாம் செலுத்தும் தொகையானது அதன் முதிர்வு காலத்திற்கு பின் வட்டியுடன் சேர்ந்து நமக்கு திரும்ப வந்து சேரும். இதனை நாம் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் தொடங்கி கொள்ளலாம். ஒவ்வொரு வங்கியும் மூத்த குடிமக்களுக்கான ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த FD திட்டத்தினை கொண்டுள்ளன. தற்போது சில வங்கிகள் தங்களது வங்கிகளில் இந்த கணக்கினை தொடங்குவதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளன. அது என்னென்ன வங்கிகள் என பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ:
WE CARE:
பாரத ஸ்டேட் வங்கி தனது வங்கியில் மூத்த குடிமக்களுக்காக WE CARE என்ற நிலையான வைப்பு தொகைக்கான திட்டத்தினை தொடங்கியது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டியும் மற்றவர்களுக்கு 7.10% வட்டியும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 முதல் 10 ஆண்டுகள். செப்டம்பர் 30, 2023 வரை இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்து கொள்ளலாம்.
அம்ரித் கலாஷ்:
இதுவும் பாரத ஸ்டேட் வங்கியின் நிலையான வைப்பு திட்டத்தில் ஒன்றாகும். இதன் மூலம் சாதாரண மக்கள் 3% முதல் 7% வரையிலும் மூத்த குடிமக்கள் 3.5% முதல் 7.5% வரையிலும் வட்டியாக பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆகஸ்ட்,15 2023 வரை நாம் கணக்கினை தொடங்கி கொள்ளலாம்.
எச்.டி.எஃப்.சி வங்கி:
இந்த திட்டத்தினை நாம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் என்ற கால கணக்கில் தொடங்கி கொள்ளலாம். 400 நாட்கள் முதிர்வு காலமாக கொண்ட இந்த திட்டத்தில் நாம் வட்டியாக 7.75- வரை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் நாம் ஜுலை மாதம் 7ஆம் தேதி வரை தொடங்கி கொள்ளலாம்.
எனவே இந்த மாதிரியான பொன்னான திட்டத்தில் சேர்ந்து நமது பணத்தினை சேமிக்கலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…