Categories: job newslatest news

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..சுங்க வரித்துறையில் வேலைவாய்ப்பு..இன்றே அப்ளை செய்யுங்க..

சென்னையில் உள்ள சுங்க வரித்துறையில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பிற்கான அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் http://www.chennaicustoms.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதனை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க தொடங்கும் நாள்: 10.06.2023

இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள்: 30.06.2023

காலிபணியிடங்கள்:

  1. ஹால்வாய் கம் குக் – 01
  2. கிளார்க்- 01
  3. கேண்டீன் அட்டண்டண்ட்- 08

கல்வி தகுதி:

  1. ஹால்வாய் கம் குக்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பினை தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும் அல்லது கேட்டரிங் படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

மேலும் சமையல் பணியில் 2 ஆண்டுகள் அனுபவமும் மற்றும் A கிரேடு தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

  1. கிளார்க்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பினை தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும் அல்லது வணிகத்துறையில் பட்டபடிப்பினை பெற்றாவராக இருத்தல் வேண்டும்.

மேலும் நிமிடத்திற்கு 35 வாரித்தைகளை ஆங்கிலத்திலும் மற்றும் 30 வார்த்தைகளை ஹிந்தியிலும் தட்டச்சு செய்யவும் வேண்டும்.

  1. கேண்டீன் அட்டண்டண்ட்:

மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதினையும் அதிகபட்சமாக 25 வயதினையும் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வினையும், தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வினையும், மத்திய அரசு ஊழியர்கள் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இப்பணிக்கு விண்ணப்பங்கள் தபால் வழியாகவே வரவேற்கபடுகின்றன. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Additional Commissioner of Customs(Establishment)

General Commissionerate

Office of the Principal Commissioner of Customs,

Custom House, No. 60, Rajaji Salai,

Chennai – 600 001.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

https://chennaicustoms.gov.in/wp-content/uploads/2023/05/Recruitment-Notification-of-Canteen.pdf

இப்பணிக்கான விண்ணப்பத்தினை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://chennaicustoms.gov.in/wp-content/uploads/2023/05/Application-Form-for-Canteen.pdf

amutha raja

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

2 hours ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago