சென்னை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் 348 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் விற்பனையாளர் 33 பேர், கட்டுநர் 315 பேர் என்று மொத்தம் 348 காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் இருக்கும் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றது.
இந்த பணியிடத்திற்கு தேர்வு எதுவும் கிடையாது. கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரேஷன் கடைகளில் இருக்கும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சென்னையில் ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் 9 இடங்கள், பிரதம கூட்டுறவு பண்டகசாலை 24 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
மேலும் கட்டுநர் பதவிக்கு திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் 88 இடங்கள், பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை 42 இடங்கள், வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை 51 இடங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை 95 இடங்கள் என மொத்தம் 315 இடங்கள் நிரப்பப்பட உள்ளன, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு என்றால் ஆதிதிராவிடர் அருந்ததியர் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. விண்ணப்பதாரக்ள் பிற மாநிலத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எந்த பிரிவை சார்ந்தவர்களாக இருப்பினும் இதர வகுப்பினராகவே கருதப்படுவார்கள். இதில் விற்பனையாளர் பதவிக்கு பொது – 10, பிசி – 8, பிசி(எம்)-1, எம்பிசி/டிஎன்சி – 7, எஸ்சி – 5, எஸ்சி(ஏ)- 1, எஸ்டி – 1 மொத்தம் 33 இடங்கள் நிரப்பப்படும்.
கட்டுநர் பதவிக்கு பொது – 97, பிசி – 82, பிசி(எம்)-10, எம்பிசி/டிஎன்சி – 63, எஸ்சி – 49, எஸ்சி(ஏ)- 11, எஸ்டி – 3 மொத்தம் 315 இடங்கள் நிரப்பப்படும். கல்வி தகுதி என்றால் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பதவிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு இணையான கல்வி தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் பேசவும் எழுத படிக்கவும் போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் நியாய விலை கடை விற்பனையாளர் பதவிக்கு 6250 மாதம் ஊதியம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு 8600 முதல் 29 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். கட்டுநர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 மாதம் வழங்கப்படும். ஓர் ஆண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் 7800 முதல் 26 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் நிலையத்திற்கு https://drbchn.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…