Connect with us

automobile

கார்களுக்கு ரூ. 1.4 லட்சம் வரை தள்ளுபடி – போக்ஸ்வேகன் அதிரடி அறிவிப்பு!

Published

on

Volkswagen-Cars-featured-img

இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. போக்ஸ்வேகன் விற்பனையாளர்கள் சார்பில் வழங்கப்படும் சலுகைகளின் படி வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான சேமிப்புகளை பெற முடியும். இந்த சலுகைகள் 2022 மற்றும் 2023 மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

2023-Volkswagen-Virtus 2

2023-Volkswagen-Virtus 2

சலுகை விவரங்கள் :

போக்ஸ்வேகன் டைகுன் 2022 மாடலுக்கு ரூ. 65 ஆயிரத்தில் துவங்கி, ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இவை கார் மாடலின் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும். இதில் அதிகபட்ச சலுகை டைகுன் டாப்லைன் மேனுவல் வேரியண்டிற்கு வழங்கப்படுகிறது. கம்ஃபர்ட்லைன் மாடலுக்கு குறைந்தபட்ச சலுகை வழங்கப்படுகிறது.

2023-Volkswagen-Virtus

2023-Volkswagen-Virtus

2023 போக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 85 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் அதிகபட்ச சலுகை டாப்லைன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் பி.எஸ். 6 2 விதிகளுக்கு பொருந்தும் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 65 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

 

போக்ஸ்வேகன் விர்டுஸ் 2022 மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இவை கம்ஃபர்ட்லைன் மேனுவல் மற்றும் ஹைலைன் மேனுவல் வேரியண்ட்களுக்கு பொருந்தும். விர்டுஸ் ஜிடி பிளஸ் ஆட்டோமேடிக் வேரியண்டிற்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

2023-Volkswagen-Taigun

2023-Volkswagen-Taigun

2023 விர்டுஸ் மாடலின் கம்ஃபர்ட்லைன், டாப்லைன் மேனுவல் மற்றும் டாப்லைன் ஆட்டோமேடிக் மாடல்களுக்கு ரூ. 85 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. பி.எஸ். 6 2 விதிகளுக்கு பொருந்தும் மாடல்களுக்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

போக்ஸ்வேகன் டிகுவான் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இவை பி.எஸ். 6 2 இல்லாத மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.

2023-Volkswagen-Taigun 2

2023-Volkswagen-Taigun 2

புதிய டைகுன் மற்றும் விர்டுஸ் வேரியண்ட்கள் :

போக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் தான் விர்டுஸ் ஜிடி பிளஸ் வேரியண்டை அறிமுகம் செய்தது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூ. 16 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் டைகுன் மாடலின் ஜிடி ஆட்டோமேடிக் மற்றும் ஜிடி பிளஸ் மேனுவல் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 16 லட்சத்து 89 ஆயிரம் மற்றும் ரூ. 17 லட்சத்து 79 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

google news