ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி), இஸ்ரோ என்ஆர்எஸ்சி (ISRO NRSC) அப்ரண்டிஸ் வேலைக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வாய்ப்பைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரால் (NRSC) வெளியிடப்பட்ட ISRO NRSC அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும். அதன்பின், www.umang.com அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
தற்பொழுது இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பட்டதாரி பயிற்சியாளர்கள் பதவிக்கு 17 பணியிடங்கள், தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் பதவிக்கு 30 பணியிடங்கள், வணிகவியல் மற்றும் கணினி பயிற்சி பதவிக்கு 23 பணியிடங்கள் என மொத்தம் 70 காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரரின் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பது வயது 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு PDF -ஐ கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பட்டதாரி பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர், பிஇ/பிடெக் என அந்தந்த துறையில் முதல் வகுப்பில் 60% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வணிகவியல் மற்றும் கணினி பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து வணிகப் பயிற்சியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது.?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் சேர ஆர்வம் மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Application Form என்னும் ஆன்லைன் வசதி மூலம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அங்கு கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 2 வரை உள்ளது. எனவே, இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் தங்களது திறமைகளை சற்று வளர்த்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இது குறித்த தகவல்களுக்கு ISRO NRSC என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
சம்பள விவரம்:
பட்டதாரி பயிற்சியாளர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.9,000-மும், தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் மற்றும் வணிகவியல் மற்றும் கணினி பயிற்சியாளர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.8,000 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…