Connect with us

job news

மிஸ் பண்ணாதீங்க ‘HSSC’ வேலைவாய்ப்பு…எப்படி விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ.!!

Published

on

ஹரியானா ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (HSSC) பல்வேறு துறைகள் / கமிஷன்கள் / வாரியங்கள் / கார்ப்பரேசன்கள் / அதிகாரிகள் / ஏஜென்சிகள் / கூட்டுறவு சங்கங்களில் குரூப் D பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது. விண்ணப்பம் செய்பவர்கள் ஹரியானவை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். இதில் சேர ஆர்வமும் விருப்பமும் இருப்பவர்கள் விண்ணப்பித்தால் பொதுத் தகுதித் தேர்வு மற்றும் சமூக-பொருளாதாரத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்

 கமிஷன்கள்,  வாரியங்கள் , கார்ப்பரேசன்கள் , அதிகாரிகள் ,  ஏஜென்சிகள் ,  கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் குரூப் D பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை பணியமர்த்துகிறது. மேற்கண்ட இந்த பதவிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 13536 ஆகும்.

சம்பளம்

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் ரூ.16900 முதல் ரூ.53500 + பொருந்தக்கூடிய spl வரை மாதச் சம்பளத்தைப் பெறுவார்.

வயது வரம்பு

மேலே கொடுக்கப்பட்ட பதவிக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது  மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 42 வயது இருக்கவேண்டும்.

தகுதி

  • விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் மெட்ரிகுலேஷன் வரை ஹிந்தி/சமஸ்கிருதம் பாடங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்

பிபி எண்/ஆதார் எண் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும், மேலும் பிபி எண்/ஆதார் எண்ணை வழங்காத விண்ணப்பதாரர் ரூ. 1000 பதிவுக் கட்டணமாக கொடுக்கவேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது

இந்த வேலையில் சேர உங்களுக்கு தகுதியும், விருப்பமும் இருக்கிறது என்றால் அதிகாரப்பூர்வ https://www.hssc.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று கடைசியாக அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணயத்தளத்திற்கு சென்று HARYANA STAFF SELECTION COMMISSION என்ற பிரிவை க்ளிக் செய்யுங்கள். அதில் கொடுப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26.06.2023. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

முக்கிய தேதிகள்: 

  • அறிவிப்பி வெளியிடப்பட்ட தேதி 30.05.2023
  • ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி 05.06.2023
  • ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 26.06.2023
  • கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி 30.06.2023
google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *