Connect with us

job news

மக்களே மிஸ் பண்ணாதீங்க…’எஸ்.பி.ஐ’ -யில் வேலை வாய்ப்பு…வெளியான அசத்தல் அறிவிப்பு.!!

Published

on

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) , ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளின் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வேலைக்கு  வேண்டும் எனவும், இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/web/careers/post-your-query என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் (மாற்றம்), மூத்த சிறப்பு நிர்வாக-திட்ட மேலாளர், மூத்த சிறப்பு நிர்வாகி-தரம் மற்றும் பயிற்சி (உள்வரும் மற்றும் வெளிச்செல்லும்), மற்றும் மூத்த சிறப்பு நிர்வாகி-கட்டளை மையம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்

SBI RECRUITMENT 2023

  • துணைத் தலைவர் ( Vice President ) – 1
  • மூத்த சிறப்பு நிர்வாக-திட்ட மேலாளர் (Senior Special Executive-Program Manager)-4
  • மூத்த சிறப்பு நிர்வாகி-தரம் மற்றும் பயிற்சி (Senior Special Executive-Quality & Training)-1
  • மூத்த சிறப்பு நிர்வாகி-கட்டளை மையம் (Senior Special Executive-Command Centre) -3

ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 9 காலியிடங்கள் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

  • துணைத் தலைவர் – 50 வயது
  • மூத்த சிறப்பு நிர்வாக-திட்ட மேலாளர்-35 வயது
  • மூத்த சிறப்பு நிர்வாகி-தரம் மற்றும் பயிற்சி-40 வயது
  • மூத்த சிறப்பு நிர்வாகி-கட்டளை மையம்-40 வயது

தகுதிகள்

துணைத் தலைவர் பதவிக்கு 

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐடி அல்லது மேனேஜ்மென்ட் துறையில் பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

மூத்த சிறப்பு நிர்வாக-திட்ட மேலாளர் பதவிக்கு 

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐடி/மேனேஜ்மென்ட் டொமைனில் பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

மூத்த சிறப்பு நிர்வாகி பதவிக்கு 

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை துறையில் பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மூத்த சிறப்பு நிர்வாகி-கட்டளை மையம் பதவிக்கு

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை காலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் ஆரம்பத்தில் 03 ஆண்டுகள் பணியமர்த்தப்படுவார். வங்கியின் விருப்பப்படி வேலை காலத்தை 01 வருடத்திற்கு (மொத்தம் 04 ஆண்டுகள் வரை) நீட்டிக்க முடியும்.

சம்பளம்

SBI RECRUITMENT

துணைத் தலைவர்  பதவிக்கு ரூ. 50.00 லட்சம் முதல் ரூ. 75.00 லட்சம் ஓராண்டுக்கு வழங்கப்படும்,  மூத்த சிறப்பு நிர்வாக-திட்ட மேலாளர் பதவிக்கு  ரூ. 22.00 லட்சத்திலிருந்து ரூ. 30.00 லட்சம் ஓராண்டுக்கு,  மூத்த சிறப்பு நிர்வாகி-தரம் மற்றும் பயிற்சி பதவிக்கு ரூ. 22.00 லட்சத்திலிருந்து ரூ. 30.00 லட்சம் ஓராண்டுக்கு, மூத்த சிறப்பு நிர்வாகி-கட்டளை மையம் பதவிக்கு ரூ. 22.00 லட்சத்திலிருந்து ரூ. 30.00 லட்சம் ஓராண்டுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது..?

கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர்கள் SBI இன் (https://bank.sbi/web/careers/post-your-query) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழு விண்ணப்ப செயல்முறையையும் ஆன்லைனில் முடிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 21/06/2023 ஆகும் எனவே, இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *