job news
பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…மாதம் அசத்தலான சம்பளம்..உடனே விண்ணப்பீங்க.!!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் அடிக்கடி வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஹவில்தார் (பாதுகாப்பு) Havildar (Security) பணிக்கான அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு வேலையில் சேர ஆர்வமும் விருப்பமும் உங்களுக்கு இருந்தால் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
காலியிடங்கள் எண்ணிக்கை
ஹவில்தார் Havildar (Security) பணிக்கு மொத்தமாக , 12 காலியிடங்கள் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விதகுதி மற்றும் அனுபவம்
இந்த Havildar (Security) பணியில் நீங்கள் வேலைக்கு சேரவேண்டும் என்றால் நீங்கள் 10-ஆம் வகுப்பு முடித்திருந்தாள் போதும். விண்ணப்பதாரர்கள் முன்மாதிரியான / மிகச் சிறந்த பதிவு மற்றும் மருத்துவம் பெற்றிருக்க வேண்டும் வகை ‘AYE’ மற்றும் SHAPE-I ஆக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 43 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என (BEL) நிறுவனம் அறிவித்துள்ளது.
சம்பளம்
இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரு மாத ஊதியம் ஊதிய அளவில் ரூ. 20,500 முதல் 79.000 வரை சம்பளமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியில் சேர நீங்கள் விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு உடல் உறுதித் தேர்வு/எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது ..?
இந்தப் பணியில் சேர ஆர்வமும் விருப்பமும் உங்களுக்கு இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bel-india.in/இணையதளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு அதில் கொடுக்கப்பட்ட விவரங்களை முறையாக பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு கடைசி தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.
முகவரி -Manager (HR), Bharat Electronics Limited, Ravindranath Tagore Road, Machilipatnam, Andhra Pradesh- 521001
கடைசி தேதி – 08.07.2023