பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Dedicated Freight Corridor Corporation of India – DFCCIL) நிறுவனம் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாகும். இது இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்படுகிறது.
தற்பொழுது, DFCCIL நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு நிறுவனங்களில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாகும்.
பதவிக்காலம் மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
DFCCIL நிறுவனம் காலியாக உள்ள AGM (OP&BD) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தற்பொழுது 1 பணியிடம் மட்டுமே காளியக உள்ளது. முந்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
விண்ணப்பதாரரின் வயது மற்றும் தகுதி:
AGM (OP&BD) பணிக்கு விண்ணப்பிப்பவரின் வயது 55 க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. AGM (OP&BD) பணிக்கு விண்ணப்பிக்கும் ஐஆர்டிஎஸ் அதிகாரி இந்திய இரயில்வே துறையில் இயக்கம் மற்றும் வணிகத்தில் (சரக்கு வணிகம்) பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது.?
அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://dfccil.com/ -க்கு செல்லவும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் அறிவிப்பில் கவனமாக படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து Application Form விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
பின் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை தபால் மூலம், பொது மேலாளர் (HR), DFCCIL, உச்ச நீதிமன்ற மெட்ரோ ஸ்டேஷன் கட்டிட வளாகம், 5வது தளம், புதுடெல்லி-110001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
AGM (OP&BD) பணிக்கு சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அறிவிப்பு வெளியீட்டுத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவேண்டும். அதாவது கடைசி தேதி ஜூன் 23 ஆகும். எனவே, இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இது குறித்த தகவல்களுக்கு Official Notification என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
சம்பள விவரம்:
AGM (OP&BD) பணிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.9,000 வரை ஊதியமாக வழங்கப்படலாம். இந்த பதவிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…