Categories: job news

ஐடிஐ முடித்தவர்களுக்கு முத்தான வாய்ப்பு..! டாடா மெமோரியல் சென்டர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!

டாட்டா நினைவு மையம் (Tata Memorial Centre) அல்லது டாட்டா புற்றுநோய் மருத்துவமனை 1941-ல் டாட்டா குழுமத்தினரால் மும்பை பெருநகரின் பரேல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் புற்றுநோய் ஆய்வு மையமாகும். அனைத்து வசதிகளையும் கொண்ட முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றாகவும் உள்ளது.

தற்பொழுது, டாட்டா நினைவு மையம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரபூர்வ அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

டாட்டா நினைவு மையம் 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பம்ப் ஆபரேட்டர் (Pump Operator) பணியை நிரப்ப உள்ளது. ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் வயது: 

பம்ப் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவலுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • பம்ப் செயல்பாடுகள் மற்றும் அது தொடர்பான பிளம்பிங் வேலைகளில் 3 வருட அனுபவத்துடன் எந்தவொரு துறையிலும் ITI முடித்திருக்க வேண்டும்.
  • இரவுகள், ஞாயிறுகள் மற்றும் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் ஷிப்ட் முறைப்படி பணியாற்ற விருப்பம் இருக்க வேண்டும்.
  • தீ தொடர்பான பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு அனுபவம் உள்ள விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • மேற்கண்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
  • நேர்காணலுக்கு வரும்பொழுது அனைத்து மதிப்பெண் சான்றிதழ், அனுபவக் கடிதத்தின் அசல் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.

நேர்காணல் இடம்: 

3rd floor, Khanolakar Shodhika,

TMC-ACTREC, Sec-22, Kharghar,

Navi Mumbai- 410210

சம்பள விவரம் மற்றும் நேர்காணல் தேதி:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.23,400 முதல் ரூ.35,000 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 14ம் தேதி நேர்காணலுக்கு வர வேண்டும். நேர்காணலுக்கான பதிவு 10 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும். அதன்பின் வரும் நபர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

 

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago