job news
பி.இ., பி.டெக் முடித்தவர்களா நீங்கள்..? அப்போ இந்த வேலை உங்களுக்கத்தான்..மிஸ் பண்ணாதீங்க..!
தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (Telecommunications Consultants India) ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் உரிமையின் கீழ் உள்ளது.
உலகெங்கிலும் வளரும் நாடுகளுக்கு தொலைத்தொடர்பு துறைகளில் ஆலோசனைகளை வழங்குவதற்காக 1978 இல் இது அமைக்கப்பட்டது. TCIL நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
காலிப்பணியிடங்கள்:
TCIL நிறுவனம் ஐடி மற்றும் டெலிகாம் துறையில் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மேலாளர் என பல்வேறு பணிகள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பவர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரபூர்வ அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் குறைந்தபட்சம் 36 வயது முதல் அதிகபட்சம் 49 வயது உடையவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவலுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பதாரர் தகுதி:
எலக்ட்ரிக்கல் தொடர்பான தொடர்புடைய துறையில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து பி.இ./பி.டெக்./எம்.டெக்/எம்.சி.ஏ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ஐடி/கம்ப்யூட்டர்ஸ் சயின்ஸ்-ல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.tcil.net.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
- பிறகு இணையதளத்தில் இருக்கும் Application Form ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தில் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்று கவனமாக படிக்கச் வேண்டும்.
- விண்ணப்பப் படிவம் அடங்கிய உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் தவறாமல் குறிப்பிடப்பட வேண்டும்.
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை கீழே உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief General Manager (HR),
Telecommunications Consultants India Ltd.,
TCIL Bhawan, Greater Kailash –I,
New Delhi – 110048
தேர்வு முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,20,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.