job news
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா..? பெல் நிறுவனத்தில் ரூ.79,000 சம்பளத்துடன் வேலை..! மிஸ் பண்ணாதீங்க..
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஒரு நவரத்னா மற்றும் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை மின்னணுவியல், மல்டி-யூனிட், பல தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமாகும்.
தற்பொழுது இந்நிறுவனம் காலியாக உள்ள பதவியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் காலியாக உள்ள ஹவில்தார் (செக்யூரிட்டி) பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
ஹவில்தார் (செக்யூரிட்டி) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 43 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்எல்சி (10th) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மாவட்ட சைனிக் நல வாரியத்தில் பதிவு செய்வது கட்டாயம்.
- தெலுங்கு மொழி அறிவு அவசியம்.
தேர்வு முறை:
தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் உடல் உறுதி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் மற்றும் உடல் தேர்வில் தகுதி பெறுபவர்கள் எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உடல் உறுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மச்சிலிப்பட்டினத்தில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
- மேற்கண்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.bel-india.in என்ற இணையதளத்திற்குச் சென்று, அங்கு உள்ள Application Form விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை தவறில்லாமல் நிரப்பி, விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்ளவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் மேலாளர் (HR), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ரவீந்திரநாத் தாகூர் சாலை, மச்சிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்- 521001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
ஹவில்தார் (செக்யூரிட்டி) பணிக்கு தெரிந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.20,500 முதல் ரூ.79,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கான விண்ணப்பபடிவத்தை ஜூலை 8ம் தேதிக்குள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.