job news
அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…
ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வு அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அன்ட் சிந்து பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யு.சி.ஓ. பேங்க் உள்ளிட்ட தேசிய வங்கிகளுக்கான 4,465 அதிகாரி காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிக்களுக்கான இத்தேர்வுக்கான ஆரம்ப நிலை தேர்வு அக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது. அதை தொடர்ந்து முதன்மை தேர்வுகள் நவம்பர் மாதம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் 21ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடப்பட்டு பணி ஒதுக்கீடு ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்ச வயது வரம்பு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும், ஓபிசிக்கு 3 வருடங்கள் தளர்வும், எஸ்.சி, எஸ்.டிக்கு 5 வருடங்கள் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக 175 ரூபாயும், மற்ற பிரிவினருக்கு 850ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://www.ibps.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். நாடு முழுவதிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.