Categories: job newslatest news

அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…

ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வு அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அன்ட் சிந்து பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யு.சி.ஓ. பேங்க் உள்ளிட்ட தேசிய வங்கிகளுக்கான 4,465 அதிகாரி  காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிக்களுக்கான இத்தேர்வுக்கான ஆரம்ப நிலை தேர்வு அக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது. அதை தொடர்ந்து முதன்மை தேர்வுகள் நவம்பர் மாதம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் 21ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடப்பட்டு பணி ஒதுக்கீடு ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்ச வயது வரம்பு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும், ஓபிசிக்கு 3 வருடங்கள் தளர்வும், எஸ்.சி, எஸ்.டிக்கு 5 வருடங்கள் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக 175 ரூபாயும், மற்ற பிரிவினருக்கு 850ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://www.ibps.in/  என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். நாடு முழுவதிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

AKHILAN

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago