இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியை ஆங்கிலத்தில் சுருக்கமாக ஐடிபிஐ என்று அழைப்பர். மத்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கி என்றும் சொல்லலாம். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெறளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்
நிர்வாகி (எக்சிகியூட்டிவ்)
காலிப்பணியிடங்கள்: 1036
வயதுத்தகுதி
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 25க்குள் இருக்க வேண்டும். இவர்கள் 2.5.1998 முதல் 1.5.2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் வருடத்தில் ரூ.29000 மும், 2வது வருடத்தில் ரூ.31000மும், 3வது வருடத்தில் ரூ.34000மும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் டெஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் முகப்பு பக்கத்தில் உள்ள கேரியர்ஸ் என்பதை அழுத்தி கரண்ட் ஓபனிங்க்ஸ்சை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது ரெக்ரூட்மெண்ட் ஆப் எக்சிகியூட்டிவ் 2023 – 24 என்று வரும். அதை கிளிக் செய்ய வேண்டும். உடன் அப்ளை ஆன்லைன் என்று வரும். அதைக் கிளிக் செய்ய விண்ணப்பப்படிவம் வரும். அதை நன்கு படித்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரிவர பூர்த்தி செய்ய வேண்டும். இப்போது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணத்தை மறக்காமல் செலுத்தி விடுங்க. கடைசியாக முக்கியமான ஒன்றை மறந்துடாதீங்க. நீங்க பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பத்தை எதிர்கால நலனுக்காக ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள். அவ்ளோ தான். ஐடிபிஐக்கு விண்ணப்பிச்சாச்சு.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 7.6.2023
மேலும் தகவல்களுக்கு:
Download Notification 2023 Pdf
Apply Online
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…