Categories: job news

10-ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…ரயில்வேயில் வேலைவாய்ப்பு…மிஸ் பண்ணமா அப்ளை பண்ணுங்க.!!

மேற்கு ரயில்வேயில் உள்ள ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, (Apprentice ) அப்ரண்டிஸ் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் RRC WR இன் அதிகாரப்பூர்வ தளமான rrc-wr.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும்  இந்த பணிக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 3,624

  • UR பிரிவினருக்கு : 1,487 காலியிடங்கள்
  • SC பிரிவினருக்கு ;  532 காலியிடங்கள்
  • ST பிரிவினருக்கு : 266 காலியிடங்கள்
  • OBC பிரிவினருக்கு : 981 காலியிடங்கள்
  • EWS பிரிவினருக்கு : 358  காலியிடங்கள்

கல்வி தகுதி

இந்த (Apprentice )அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பம் செய்ய உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நீங்கள்  10 + 2 தேர்வு முறையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு 

விண்ணப்பதாரர்களின்  15 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

அப்ரண்டிஸ் சட்டம், 1961ன்- கீழ் பயிற்சி அளிப்பதற்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் தகுதிப் பட்டியலின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் (குறைந்தபட்சம் 50% (மொத்தம்) மதிப்பெண்களுடன்] பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் சராசரியைக் கொண்டு தேர்வுமுறை நடக்கும்.

விண்ணப்பிக்கும் முறை 

இந்த அறிவிப்பில் உள்ள அனைத்து வழிமுறைகளையும் கவனமாகப் படித்து, நீங்கள் விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவரா என்பதை முதலில்  உறுதிப்படுத்தவும். பிறகு, மேற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrc-wr.com/ சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம். விண்ணப்பம் செய்யும் போது கேட்கும் சரியான மின்னஞ்சலை பதிவு செய்யுமாறும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்யுங்கள்.

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/PWD/பெண்கள் விண்ணப்பதாரர்கள்
  • அனைத்து விண்ணப்பதாரர்களும்: ரூ 100

அதிகாரப்பூர்வ இணையத்தளம் – https://www.rrc-wr.com/

official notification – LINK 

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago