Connect with us

job news

என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா..? ரெடியா இருங்க..! உங்களுக்காக வருகிறது அரிய வாய்ப்பு..!

Published

on

NLC

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். நெய்வேலி காலியாக உள்ள பல்வேறு பணிகளை நிரப்புவதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

என்எல்சி நிறுவனத்தில் பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காலிப்பணியிடங்கள்:

என்எல்சி நிறுவனத்தில் நிர்வாக பொறியாளர் (Executive Engineer), மேலாளர் (Manager), பொது மேலாளர் (General Manager), துணை பொது மேலாளர் (Deputy General Manager) என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் மொத்தமாக 294 காலிப்பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரர் வயது:

என்எல்சியில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது 30 லிருந்து 59க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்படிப்பவர் சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • முழுநேர அல்லது பகுதிநேர எம்.எஸ்சி./ எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன், விண்ணப்பதாரர்கள் தங்களிடம் செயலில் உள்ள மொபைல் எண் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும்.
  • ஏனெனில் என்எல்சிஐஎல் பயிற்சி தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளையும் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • அனைத்து சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், வயது, கல்வித் தகுதிகள், அனுபவம் போன்ற ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்ற வேண்டும், தவறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
  • தேவையான சான்றிதழ்களை பதிவேற்றிய பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட் எடுத்து, சான்றிதழ்கள் / ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன், ஆவணம் / சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

மேற்கணட பதவிகளுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மற்ற விவரங்கள் அனுப்பப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: 

என்எல்சி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் UR / EWS / OBC  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.354 செலுத்த வேண்டும். SC / ST / PwBD / முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.354 செலுத்த வேண்டும். விண்ணப்பக்கட்டணம் திருப்பித்தரப்பட மாட்டாது.

NLC

NLC

சம்பள விவரம்:

என்எல்சி பணிகளுக்கு தேர்வு செய்யட்டும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.2,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

NLC

NLC

கடைசி தேதி:

விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தை ஜூலை 5ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 3ம் தேதிக்கு முன்னதாக, அனைத்து ஆதார ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

NLC

NLC

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *