job news
டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..! அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்யலாம்..உடனே விண்ணப்பிங்க..!
அண்ணா பல்கலைக்கழகம் 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி ஒரு ஒற்றைப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. இது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் உயர் கல்வியை வழங்குகிறது.
தற்பொழுது, அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி வளாகம், சென்னை – 600 025 என்ற முகவரியில் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள தற்காலிகப் பணிக்கு தகுதியும் விருப்பமும் Notification உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
காலிப்பணியிடங்கள்:
அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பயோடெக்னாலஜி துறையில் தொழில்முறை உதவியாளர் III – எலக்ட்ரீசியன் பணியை நிற்ப உள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் வயது:
தொழில்முறை உதவியாளர் III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறித்து குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எலக்ட்ரிக்கல் ‘சி’ உரிமத்துடன் EEE இல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
- பின் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்டகப்பட்டிருக்கும் தகவல்களை சரியாக நிரப்ப வேண்டும்.
- அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
- பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற ஆவணத்தின் நகல் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
- தபாலில் அனுப்பும் பொழுது உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை எழுத வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Head,
Department of Biotechnology,
Alagappa College of Technology,
Anna University,
Chennai – 600 025
தேர்வு முறை:
- தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
- நேர்காணலின் தேதி மற்றும் நேரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
அண்ணா பல்கலைக்கழகப் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.699 சம்பளமாக வழங்கப்படும். தொழில்முறை உதவியாளர் III பணிக்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 17ம் தேதிகுள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.