Connect with us

job news

10-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு ஜாக்பாட்…அப்ரண்டிஸ் பதவிக்கான வேலைவாய்ப்பு..உடனே விண்ணப்பீங்க.!!

Published

on

Integral Coach Factory, Chennai சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் அவ்வப்போது வேலைவாய்ப்புகான அறிவிப்பை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 10-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான (APPRENTICES )அப்ரண்டிஸ் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்சி விவரம்:

  1. Welder
  2. MLT-Radiology
  3. MLT-Pathology
  4. PASAA
  5. Carpenter
  6. Electrician
  7. Fitter
  8. Machinist
  9. Painter

மொத்தமாக 782 காலியிடங்கள் உள்ளது.

APPRENTICES பணிக்கான கல்வி தகுதி 

இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும், ஆர்வமும் இருந்தால்  நீங்கள் கண்டிப்பாக 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது இந்த தொழில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்து முடித்திருக்க வேண்டும். மேலும், 10-வது தேர்ச்சி பெற்றவர்களில் இந்த பணியில் விண்ணப்பம் செய்தால் அவர்களுக்கு  இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். ஐ.டி.ஐ. முடித்தவர்களாக இருந்தால் 1 ஆண்டு கால பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு 

இந்த APPRENTICES பதவியில் வேலைக்கு சேர விண்ணப்பம் செய்பவர்கள்  15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். பழங்குடியின/ பட்டியலின, முன்னாள் பொதுத்துறை ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை 

மேற்கண் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்களில் பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகான ஊக்கத்தொகை

Freshers – (10-வது தேர்ச்சி பெற்றவர்கள்) ரூ. 6000/-

Freshers – (12-வது தேர்ச்சி பெற்றவர்கள்) ரூ. 7000/-

Ex-ITI – ரூ. 7000/-

எப்படி விண்ணபிப்பது..? 

இந்த பணியில் சேர ஆர்வமும் விருப்பமும் இருந்தால் முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pb.icf.gov.in/index.php க்கு சென்று அங்கு விண்ணப்பம் செய்துகொள்ளலாம். இந்த பணிக்கு 10 வகுப்பு முடித்திருந்தால் போதும் எனவே,  இதில் சேர விருப்பம் உள்ளவர்கள்  விவரங்களை படித்துக்கொண்டு உடனடியாக விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள். இதில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30/06/2023 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *