நிறைய படிச்சும் வேலை இல்லையேன்னு கவலைப்படுறவங்களைப் பார்த்திருப்போம். எல்லாத்துக்கும் நேரம், காலம் வரணும்… அப்போதான் வேலையும் கிடைக்கும்னு சொல்லிக்கிட்டு ஒரு மூலைல போய் உட்கார்ந்துரக் கூடாது.
சிலர் படிப்புக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத வேலையைப் பார்த்துக்கிட்டு நொந்து போய் இருப்பாங்க. அவங்க அடுத்த கட்டத்துக்கான முயற்சியை செய்ய முடியாம கஷ்டப்படுவாங்க. சம்பந்தமில்லாத வேலையே அவங்களை அப்படியே அமுக்கி போட்டுவிடும்.
அதன்பிறகு வயசானதும் படிச்ச உடனே அப்ளை பண்ணிருந்தா இந்த சிக்கல் இருந்துருக்காது. இப்ப தான் எனக்கு ஞானோதயம் வந்துருக்குன்னு சொல்லி வருந்துவாங்க. அப்படிப்பட்டவங்க வயசு போனதும் அப்ளை பண்ண தகுதி இல்லாதவராக மாறிடுவாங்க. அதனால படிச்ச உடனேயே எங்கே நமக்கு ஜாப் இருக்குன்னு தேட ஆரம்பிச்சடணும்.
இப்போ தான் நெட் எல்லாமே வந்துட்டே. அதனால கவலைப்படாம நீங்க ஈசியா தேடலாம். உங்களுக்குப் போட்டி ஒரு பக்கம் இருந்தாலும் உங்களுக்கு எங்கே வேலைன்னு ஈசியா கண்டுபிடிக்க நெட் இருக்கு. அதனால சும்மா இருக்காம ஒரு காலியிடம் இருந்தா கூட அதுக்கு அப்ளை பண்ணி விடாம விடாமுயற்சியோடு உங்களுக்கான தகுதியை வளர்த்துக்கொண்டு களத்தில் குதித்து வேலையை எப்படியாவது கைப்பற்றுங்க.
உங்களுக்கு பலரும் பல ஆலோசனைகள் சொல்லலாம். எல்லாத்தையும் போட்டுக் கொழப்பிக்கிட்டு நீங்களும் குழம்பிடாதீங்க. உங்களுக்கு எது சரி, எது தப்புன்னு கண்டிப்பா தெரியும். தைரியமா சரின்னு படுற விஷயத்துல இறங்கி வேலை செய்யுங்க. இன்டர்வியூ மட்டுமே இருக்குற மாதிரி நிறைய வேலை இணையதளத்தில கொட்டிக் கிடக்கு.
அதுக்கு எல்லாம் அப்ளை பண்ணி… ஸ்மார்ட்டா வேலை செஞ்சி வாழ்க்கையில ஸ்மார்ட்டா முன்னேறுங்க. உங்களைப் பார்த்து பலரும் பெருமைப்படுவாங்க. உங்க திறமையும் கூடுதலா வளரும். இப்போதைக்கு படிப்பு முடிச்ச உடனே வேலையைத் தேடுறது தான் உங்க லட்சியமாக இருக்கணும். வேறு எதிலும் காதல் கீதல்னு கவனம் சிதறி கோட்டையை விட்டுறாதீங்க.
இந்த வயசு ரெண்டும் கெட்டான் வயசு. ஜாலியா இருக்கணும்னு தோணும். சினிமா, பார்க், பீச்சுன்னு பிரண்ட்ஸ்களோடு அடிக்கடி சுத்துறது, கிரிக்கெட் விளையாடறதுன்னே காலத்தைக் கழிச்சிட்டு வேலையைத் தேடுறதுல கோட்டையை விட்டுராதீங்க. விளையாட்டு, ஜாலி ஒரு பக்கம் இருந்தாலும் வேலையைத் தேடுறதுல தான் உங்க முழுக்கவனமும் இருக்கணும்.
உத்யோகம் புருஷ லட்சணம் என்பதை மறந்துடாதீங்க. வேலையில மட்டும் நீங்க செட்டில் ஆயிட்டீங்கன்னா வாழ்க்கைல எல்லா விஷயங்களும் நீங்க நினைச்சா மாதிரி சூப்பரா பூர்த்தியாயிடும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…