Categories: job news

ரூ.20,000 சம்பளத்தில் இந்திய மத்திய வங்கியில் வேலை..! மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்திய மத்திய வங்கி (Central Bank of India) அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி இந்தியாவின், பொருளாதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருமுமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தற்பொழுது, இந்திய மத்திய வங்கி காலியாக உள்ள Faculty, அலுவலக உதவியாளர், உதவியாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.

காலிப்பணியிடம் மற்றும் வயது: 

இந்திய மத்திய வங்கியில் மேற்கண்ட பணிகளில் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.  மேலும், விண்ணப்பதாரர் 18 வயது முதல் 40 வயது உள்ளவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கிராமப்புற வளர்ச்சியில் எம்எஸ்டபிள்யூ/எம்ஏ பட்டதாரி/முதுகலைப் பட்டம்/எம்ஏ சமூகவியல்/உளவியல்/பிஎஸ்சி (கால்நடை மருத்துவம்), பிஎஸ்சி (தோட்டக்கலை), பிஎஸ்சி (வேளாண்மை சந்தைப்படுத்தல்)/பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • BSW/BA/B.Com./கணினி அறிவு போன்ற பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.centralbankofindia.co.in/en/recruitments அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று,  Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு அறிவிப்பில் இருக்கும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • பின் விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பவேண்டும். விண்ணப்பதாரர்கள் தபால் உறையில் தாங்கள் விண்ணப்பிக்கும் பணியை குறிப்பிட்டு எழுத வேண்டும்.
  • அனுப்பவேண்டிய முகவரி: Regional Head, Central Bank of India, Regional Office, 1St Floor Infront of Nagar Palika, Deoria, U.P-274001

சம்பளம் விவரம் மற்றும் கடைசி தேதி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை ஜூன் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு அப்பால் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. முழுமையடையாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

 

Central bank Job

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

2 hours ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

6 hours ago