டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) காலியாக உள்ள உதவி கணக்கு அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, கட்டிடக்கலை உதவியாளர், சட்ட உதவியாளர், நைப் தாசில்தார், ஜூனியர் இன்ஜினியர், சர்வேயர், பட்வாரி மற்றும் இளநிலை செயலக உதவியாளர் ஆகிய பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், டெல்லி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள ஆட்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
உதவி கணக்கு அதிகாரி(51), உதவி பிரிவு அதிகாரி(125), கட்டிடக்கலை உதவியாளர்(9), சட்ட உதவியாளர்(15), நைப் தாசில்தார்(4), ஜூனியர் இன்ஜினியர்(236), சர்வேயர்(13), பட்வாரி(40) மற்றும் இளநிலை செயலக உதவியாளர்(196) என மொத்தம் 687 காலிப்பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரரின் தகுதி:
உதவி கணக்கு அலுவலர்:
பட்டய கணக்காளர் (CA) / நிறுவன செயலர் (CS) / ICWA / நிதிக் கட்டுப்பாட்டில் முதுகலை / MBA (நிதி), அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். எம்.காம் சமமான தகுதியாக கருதப்படாது.
உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ):
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் கணினி பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டிடக்கலை உதவியாளர்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனம் அல்லது அதற்கு இணையான கட்டிடக்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சட்ட உதவியாளர்:
சட்டத்தில் வழக்கமான பட்டம் (பட்டியில் பதிவு செய்வதற்கும் நீதிமன்றங்களில் ஆஜராவதற்கும் உரிமை உண்டு).
பார் கவுன்சிலில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நைப் தாசில்தார்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை பொறியாளர் (சிவில்):
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வி பெற்றிருக்க வேண்டும்.
சர்வேயர்:
டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது அதற்கு சமமான நிறுவனத்திலிருந்து சர்வேயில் இரண்டு வருட அனுபவத்துடன் தேசிய வர்த்தகச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பட்வாரி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை செயலக உதவியாளர்:
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி மற்றும் கணினியில் தட்டச்சு வேகம் ஆங்கிலத்தில் 35 wpm அல்லது இந்தியில் 30 wpm இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு ஆட்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணிகளுக்கு ஏற்ப மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://www.dda.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…