job news
இந்திய ரயில்வேயில் வேலை..மாதம் ரூ.9,000 சம்பளத்துடன்..! எப்படி விண்ணப்பிப்பது..? முழுவிவரம் இதோ..
ஐஆர்சிடிசி என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம், இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமாக ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணையவழி பயணச்சீட்டுப் பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது.
தற்பொழுது, ஐஆர்சிடிசி ஒப்பந்தகால அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடம்:
ஐஆர்சிடிசி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர் (9), நிர்வாகி (2), HR நிர்வாக ஊதியம் & பணியாளர் தரவு மேலாண்மை (2), ஊடக ஒருங்கிணைப்பாளர், எக்ஸிகியூட்டிவ்-எச்.ஆர், மனித வளப் பயிற்சி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப உள்ளது.
விண்ணப்பதாரர் வயது:
- ஐஆர்சிடிசி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து 10ம் வகுப்பு மற்றும் ஐஐடி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர் irctc.com அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்கச் வேண்டும்.
- பிறகு, www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யவேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் ஆவணம் சரிபார்ப்புக்கு வர வேண்டும்.
- இதற்கு பொருத்தமானவர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தெரிந்தெடுக்கப்படுவார்.
கடைசி தேதி மற்றும் சம்பள விவரம்:
ஐஆர்சிடிசி பணிக்கு விண்ணபிப்பவர் ஜூலை 15ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். அதனைத்தாண்டி விண்ணப்பித்தால் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலே, குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.