job news
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலை..! மாதம் ரூ.68,000 சம்பளமாம்..உடனே விண்ணப்பிங்க..!
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (Oil and Natural Gas Corporation) என்பது ஒரு இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் ஆகும். இது ஃபார்ச்சூன் குளோபல் 500 நிறுவனத் தரவரிசையில் 152ஆவது இடம் வகிக்கிறது, மேலும் இது இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 77%மும், இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 81%மும் பங்களிக்கிறது.
தற்பொழுது, எரிவாயுக் கழகம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிறைப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரபூர்வ அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பணிகளுக்கு மேற்கு வங்க அரசின் சேவைகளில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்வமுள்ள மற்றும் தகுதியான ஓய்வுபெற்ற வருவாய் அதிகாரிகளை அழைக்கிறது. இதற்கு 3 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர் 68 வயது வரை அல்லது 4 ஆண்டுகளுக்கு பணியில் ஈடுபடுத்தப்படுவார். மேலும் விவரங்களுக்கு Notification அதிகாரபூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
- மேற்கு வங்காளத்தில் நிலம் கையகப்படுத்தும் துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- LAO அல்லது மேற்கு வங்காள அரசாங்கத்தின் வருவாய்த் துறையில் அதற்கு இணையான பதவி.
- கணினி பற்றிய போதிய அறிவு.
தேர்வு முறை:
- தகுதியுள்ள விண்ணப்பதாரர் ongcindia.com அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று Notification அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் வேண்டும்.
- அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை சரியாக நிரப்ப வேண்டும்.
- பிறகு முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்த்துடன், அனுபவச் சான்றிதழ், சேவை டிஸ்சார்ஜ் சான்றிதழ் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஒவ்வொரு சான்றிதழ்களின் இரண்டு செட் நகல்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.
நேர்காணல் முகவரி:
ONGC, Technopolis Building,
BP-4, Sector V,
Salt Lake City, Kolkata
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.68,000 சம்பளமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 14ம் தேதி நேர்காணலுக்கு வர வேண்டும். நேர்காணலுக்கான பதிவு 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். அதன்பின் வரும் நபர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.