Categories: job news

பட்டதாரிகளுக்கு என்ஐடி திருச்சியில் வேலை..! மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம்..இப்போவே அப்ளை பண்ணுங்க..!

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளி, (NIT Trichy) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இந்த நிறுவனம் அவ்வப்போது காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிடும்.

அதன்படி, தற்பொழுது இந்நிறுவனம் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow) பணியை நிரப்புவதற்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

நில அதிர்வு அபாயம் உள்ள பகுதிகளில் குறைந்த எடை கொண்ட வீடுகளுக்கான வளர்ந்து வரும் மாற்று கட்டுமான தொழில்நுட்பம் திட்டத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow) பணிக்கு 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. எனவே, தாமதிக்காமல் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர் வயது:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது குறித்த தகவல் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. மேலும் விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் / பி.இ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டமைப்பு பொறியியலில் M.Tech /M.E. முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.nitt.eduஅதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்கச் வேண்டும்.
  • பின், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்பட்டுள்ள தகவல்களை நிரப்ப வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் sknittprojects@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை:

  • இந்த பணிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர் மின்னஞ்சல் அல்லது மொபைல் மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்.
  • Conference Hall, Department of Civil Engineering, NIT Tiruchirappalli. -ல் ஆகஸ்ட் 11 தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 31ம் தேதிக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பியிருக்க வேண்டும். அதனைத்தாண்டி அனுப்பும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

NIT Trichy

Web Desk

Recent Posts

விளையாட்டில் உலக அளவில் தமிழகம் சாதனை…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்…

மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…

13 hours ago

நடிகர் ரஜினியின் உடல் நிலை…விரைவில் நலனடைய குவியும் வாழ்த்துகள்…

தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…

15 hours ago

தங்கம் வாங்க நேரம் இது தானா?…வீழ்ச்சியில் விற்பனை விலை…

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…

16 hours ago

உதயநிதியை சந்தித்த நடிகர் சிவகார்த்திக்கேயன்…துணை முதல்வருக்கு வாழ்த்து…

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…

16 hours ago

கன மழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் எது எது?…வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்-டேட்…

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…

18 hours ago

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…

18 hours ago