job news
எந்த அனுபவமும் தேவையில்லை…வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு.!!
இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ( IBPS ) மூத்த மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் மற்றும் பல்நோக்கு பணிகளுக்கு தகுதியான இந்திய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்கிறது. எனவே, இந்த பதவிகளுக்கு வேலையில் சேர ஆர்வம் உள்ளது என்றால் கீழே உள்ள விவரங்களை படித்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
- உதவி மேலாளர் (Assistant Manager)- 73
- மேலாளர் ( Manager) -516
- மூத்த மேலாளர் (Senior Manager)-2485
- அலுவலக உதவியாளர் ( Multipurpose) -5538
என மொத்தமாக இந்த பதவிகளுக்கு கிட்டத்தட்ட 8,612 காலியிடங்கள் உள்ளது.
தேவையான தகுதி
உதவி மேலாளர் (Assistant Manager) பதவிக்கு
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பங்கேற்கும் RRB/s மூலம் பரிந்துரைக்கப்படும் உள்ளூர் மொழியில் புலமை. கணினியில் பணிபுரியும் அறிவு உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலாளர் ( Manager) பதவிக்கு
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விவசாயம், தோட்டக்கலை, வனவியல், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு, வேளாண்மை சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும்.
மூத்த மேலாளர் (Senior Manager)
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவையான அனுபவம்
அலுவலக உதவியாளர் ,உதவி மேலாளர் பதவிக்கு
- இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எந்த அனுபவமும் தேவையில்லை.
மேலாளர் பதவிக்கு
- விண்ணப்பதாரர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் அதிகாரியாக இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் ஒரு வருட அனுபவம் (சம்பந்தப்பட்ட துறையில்) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
- முதுநிலை மேலாளர் – 21 வயதை கடந்திருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 வயது ஆகும்.
- மேலாளர்-21 வயதை கடந்திருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 வயது ஆகும்.
- உதவி மேலாளர்-18 வயதை கடந்திருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 30 வயது ஆகும்.
- அலுவலக உதவியாளர்-18 வயதை கடந்திருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 28 வயது ஆகும்.
சம்பளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சம்பள அளவு I, II மற்றும் III இல் மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது..?
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ (https://www.ibps.in/) இணையதளத்தில் இருந்து கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆன்லைன் விண்ணப்பம் இன்று (அதாவது 01.06.20023) தொடங்கப்பட்டது மற்றும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி 21.06.2023 ஆகும். மேலும் இந்த வேலையில் விண்ணப்பம் செய்துகொள்ளும் படிவமும், அதன் விதிமுறைகளும் இந்த PDF-ல் கொடுக்கப்பட்டுள்ளது.