Northern Railway Recruitment வடக்கு ரயில்வே (B) ஆலோசகர் (S&T) (இன்ஜி., எஸ் மற்றும் டி, எலக்ட்ரிக்கல்) பதவிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான ஆட்கள் வேலைக்கு வேண்டும் எனவும், 10 காலியிடங்கள் உள்ளன எனவும் அறிவித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறை, சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் மின் துறையின் ஜூனியர் ஸ்கேல்/ சீனியர் ஸ்கேல் அல்லது JAG/SG பதவியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களை வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
மொத்த காலியிடங்கள்
வடக்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆலோசகர் (Eng., S and T, Electrical). இந்த பதவிக்கு 10 காலியிடங்கள் உள்ளன என அறிவித்துள்ளது. எனவே, இதில் சேர விரும்புபவர்கள் கீழே வரும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள்.
பணிகள்
ஆலோசகர் (இன்ஜி.)
ஆலோசகர்(எஸ் மற்றும் டி)
ஆலோசகர் (மின்சாரம்):
ஆட்சேர்ப்புக்கான காலம்
தகுதி
இந்த வேலையில் சேர உங்களுக்கு ஆர்வம் உள்ளது என்றால் நீங்கள் பொறியியல் துறை, சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் மின் துறையின் ஜூனியர் ஸ்கேல்/ சீனியர் ஸ்கேல் அல்லது JAG/SG பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
வடக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஓய்வு பெற்ற அதிகாரிக்கு மாதாந்திர ஊதியம் ரயில்வே வாரியத்தின் டிரான்ஸ் செல்/ எஸ் மற்றும் டி/ ஒப்பந்த ஊழியர்களின் படி வழங்கப்படும்.
வயது வரம்பு
குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 65 வயதிற்கு குறைவாக இருக்கவேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது..?
இதில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் வடக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, ஸ்பீட் போஸ்ட் அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் “தலைமை நிர்வாக அதிகாரி/ கட்டுமான அலுவலகம், வடக்கு ரயில்வே, காஷ்மீர் கேட் – 110006” என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கலாம்.
இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் (ஓய்வு பெற்ற அதிகாரி) உறையில் “ஓய்வு பெற்ற அரசிதழ் அதிகாரிகளின் மறு பணி” என எழுதப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆஃப்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 06.06.2023. விண்ணப்பதாரர்கள் முன்மொழிவின் கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF–ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். MORE Information – (Notification) = PDF
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…