Categories: job news

பி.இ முடித்தவர்களுக்கு வாய்ப்பு…! விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இளம் தொழில் வல்லுநர் வேலை..!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India – SAI) இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 1984இல் நிறுவப்பட்ட மீயுயர் தேசிய விளையாட்டு அமைப்பாகும்.

தற்பொழுது, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பதவியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள்:

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ளஇளம் தொழில் வல்லுநர் (பொது மேலாண்மை) (Young Professional ) பணியை நிரப்புவதற்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

sai recruitment

விண்ணப்பதாரர் வயது:

இளம் தொழில் வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 32 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

sai recruitment

விண்ணப்பதாரர் தகுதி:

  • ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது
  • BE/B.Tech அல்லது 2 வருட PG டிப்ளமோ
  • MBBS அல்லது LLB அல்லது CA அல்லது ICWA
  • 12ம் வகுப்பிற்கு பிறகு 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புக்குப் பிறகு தொழில்முறை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

sai recruitment

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர் sportsauthorityofindia.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • அந்த இணையதளத்தில் Application Form -ல் கேட்க்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக நிரப்ப வேண்டும்.
  • பின் தங்களது சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் பதிவேற்றப்பட வேண்டும்.
  • வேறு எந்த முறையிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சேரும் நேரத்தில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.

சம்பள விவரம்:

இளம் தொழில் வல்லுநர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

கடைசி தேதி:

இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago