job news
பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு..! மாதம் ரூ.47,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனம் அதன் புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேதக் கழகத்தின் (AIIA) அலுவலகங்களில் பணியமர்த்துவதற்கு குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிக்கு ஆள்சேர்ப்புக்காக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஏற்கனவே இதே போன்ற துறையில் பணிபுரியும் உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் BECIL -ல் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
விண்ணப்பதாரரின் வயது மற்றும் தகுதி:
ரிசர்ச் அசோசியேட் வேலைக்காக விண்ணப்பிப்பவரில் ஆணிற்கு 40 வயது எனவும் பெண்ணிற்கு 42 வயது இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு BECIL-ஐ கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஆயுஷ் சிறப்புகள் சம்பந்தப்பட்ட பாடத்தில் பிஎச்.டி. அல்லது ஆயுர்வேதம் / யுனானி / சித்தா / ஹோமியோபதியில் முதுகலைப் பட்டம் அல்லது குறைந்தபட்சம் 3 வருட ஆராய்ச்சி அனுபவத்துடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதாவது, ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆர், சிஎஸ்ஐஆர், டிஎஸ்டி அல்லது அதற்கு சமமான அமைப்பால் நிதியளிக்கப்பட்ட ஏதேனும் ஆராய்ச்சித் திட்டத்திற்காகப் பணிபுரிந்திருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது.?
ரிசர்ச் அசோசியேட் வேலைக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெறுவதற்கு www.becil.com என்ற அதிகாரபூர்வ இணையத்தை பார்வையிடவும். விண்ணப்பிக்கும் முன் மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும்.
வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், கையொப்பம், பிறப்புச் சான்றிதழ்/10வது சான்றிதழ், ஜாதிச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி சமர்ப்பிப்புக்கு முன் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரிசர்ச் அசோசியேட் வேலைக்கு விண்ணப்பிக்கும் பொது/ ஓபிசி பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்/ பெண்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.885/- செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்/ உடல் ஊனமுற்றோர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.531/- செலுத்த வேண்டும். ஒரு முறை செலுத்திய பதிவுக் கட்டணம் எந்தச் சூழ்நிலையிலும் திரும்பப் பெறப்பட மாட்டாது.
தேர்வு செயல்முறை:
ரிசர்ச் அசோசியேட் வேலைக்கு தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் விவரம், மின்னஞ்சல் / தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 6 வரை உள்ளது. எனவே, இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இது குறித்த தகவல்களுக்கு BECIL என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
சம்பள விவரம்:
ரிசர்ச் அசோசியேட் வேலைக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.47,000 ஊதியமாக வழங்கப்படும்.