Categories: job news

Recruitment: பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..! மத்திய அரசுத்துறையில் வேலை..!

சாகித்ய அகாடமி என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்தியாவின் முதன்மையான இலக்கிய நிறுவனம் அகாடமி விருது, பெல்லோஷிப்கள், மானியங்கள், வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், பட்டறைகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை பாதுகாத்து ஊக்குவிக்கிறது.

இந்திய இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுடன் இலக்கிய பரிமாற்ற திட்டங்களையும் அகாடமி மேற்கொள்கிறது. தற்பொழுது, நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களை அகாடமி வரவேற்கிறது. மேலும் தகவல்களுக்கு https://www.sahitya-akademi.gov.in/ என்ற அதிகாரப்பூரவ இணையதளத்தை அணுகலாம்.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

தற்பொழுது இந்நிறுவனத்தில் துணைச் செயலாளர் (பொது)(1), மூத்த கணக்காளர்(1), வெளியீட்டு உதவியாளர்(1), திட்ட உதவியாளர்(1),  ஸ்டெனோகிராபர் கிரேடு-II (2), மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்(3) என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளது.

விண்ணப்பதாரரின் வயது:

  • துணை செயலாளர் (பொது) பணிக்கு விண்ணப்பிப்பவர் 50 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • மூத்த கணக்காளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 40 வயது வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • வெளியீட்டு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 35 வயது வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • நிகழ்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • ஸ்டெனோகிராபர் கிரேடு-II பணிக்கு விண்ணப்பிப்பவர் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • பல்பணி ஊழியர் (மல்டி டாஸ்கிங்) பணிக்கு விண்ணப்பிப்பவர் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி:

  • துணைச் செயலாளர் (பொது) பணிக்கு, முதுகலை பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் துறை தொடர்புடைய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மூத்த கணக்காளர் பணிக்கு, வணிகத்தில் பட்டம் மற்றும் கணக்கியலில் 5 வருட அனுபவம் மற்றும் அரசாங்க விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய அறிவுத்திறன் இருக்க வேண்டும்.
  • வெளியீட்டு உதவியாளர் பணிக்கு அச்சிடும் துறையில் பட்டம் மற்றும் டிப்ளமோ அல்லது அச்சகம் அல்லது பதிப்பகம் அல்லது புத்தக வெளியீட்டில் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்தில் 5 வருட அனுபவம். அச்சிடுதல் மற்றும் புத்தக வெளியீட்டின் பல்வேறு செயல்முறைகள் பற்றிய அறிவுத்திறன் போன்றவை இருக்க வேண்டும்.
  • நிகழ்ச்சி உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் 5 வருட அனுபவம். கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றை ஒழுங்கமைக்கும் திறன். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் மற்றும் இலக்கியங்களைப் பற்றிய நல்ல அறிவுத்திறன் , இலக்கியப் பொருட்களைக் கையாளும் திறன். கணினி பயன்பாடுகளின் அடிப்படை அறிவுத்திறன் போன்றவற்றை கொண்டிருக்க வேண்டும்.
  • ஸ்டெனோகிராஃபர் கிரேடு-II பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10+2 அல்லது அதற்கு சமமான தகுதி. சுருக்கெழுத்தில் வேகம் மற்றும் ஆங்கிலம்/இந்தியில் தட்டச்சு செய்வதில் நல்ல வேகம். கணினி பயன்பாட்டில் நல்ல அறிவுத்திறன் மற்றும் ஸ்டெனோகிராஃபராக 1 வருட அனுபவம் ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும்.
  • பல்பணி ஊழியர் (மல்டி டாஸ்கிங்) பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐக்கு சமமான தேர்ச்சி மற்றும் ஒரு ஊழியர் பல வேலைகளைச் செய்யும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

வேலை இடங்கள்:

குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் புது தில்லி, பெங்களூரு, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சாகித்ய அகாடமி தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

சம்பள விவரம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு More Details க்குச் சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை & கடைசி தேதி:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட Application Form என்ற விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்துடன், செயலர், சாகித்ய அகாடமி, ரவீந்திர பவன், 35 ஃபெரோஸ்ஷா சாலை, புது தில்லி-110001 என்ற முகவரிக்கு அனைத்து கல்வி ஆவணங்கள், அனுபவம் மற்றும் சாதி சான்றிதழ் போன்றவற்றின் நகல்களுடன் விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
  • தபால் உறையில் தங்கள் விண்ணப்பிக்கும் (______ பதவிக்கான விண்ணப்பம்) என்று எழுதி அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
  • ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • இந்த வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது கடைசி தேதி ஜூன் 12 வரை உள்ளது.

amutha raja

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

4 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

4 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

7 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

8 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

8 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

9 hours ago