Categories: job news

மாதம் ரூ.38,881 அணுசக்தித் துறையில் வேலை..! மைனிங்கில் ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிங்க..!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Uranium Corporation of India Limited – UCIL) என்பது யுரேனியம் சுரங்கம் மற்றும் யுரேனியம் செயலாக்கத்திற்கான அணுசக்தித் துறையின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1967-ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் யுரேனியம் தாது சுரங்கம் மற்றும் தாதுவைனைத் தோண்டி எடுக்கும் பொறுப்பினைக் கொண்டது.

தற்பொழுது, UCIL காலியாக உள்ள பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:

அணுசக்தித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமான UCIL, மைனிங் மேட் (Mining Mate)  பணிக்காக காலியாக உள்ள 42 பணியிடங்களை நிரப்ப  உள்ளது.

பதவி காலம்:

மைனிங் மேட் பணிக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 1 வருட காலத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். நிறுவனத்தின் தேவை மற்றும் விண்ணப்பதாரரின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 1 ஆண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் வயது:

மைனிங் மேட் பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 52 முதல் 57 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • மைனிங் மேட் சான்றிதழுடன் இடைநிலை தகுதிச் சான்றிதழ்/கட்டுப்பாடற்ற ஃபோர்மேன் தகுதிச் சான்றிதழ்/ தடையற்ற இரண்டாம் வகுப்பு மேலாளர்கள் தகுதிச் சான்றிதழ்/ தடையற்ற முதல் வகுப்பு மேலாளர்கள் டிஜிஎம்எஸ் வழங்கிய உலோகச் சுரங்கங்களுக்கான தகுதிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • மெட்டாலிஃபெரஸ் நிலத்தடி சுரங்கங்களில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர் ஹிந்தி/உள்ளூர் மொழி படிக்க, எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மைனிங் மேட் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ucil.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு அறிவிப்பில் இருக்கும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • பின் கீழே உள்ள முகவரிக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.
  • நேர்காணல் முகவரி: ஜதுகுடா மைன்ஸ், கிழக்கு சிங்பூம், ஜார்கண்ட் – 832 102
  • மேலும் விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

தேர்வு முறை மற்றும் கடைசி தேதி: 

மைனிங் மேட் பணிக்கான தேர்வு நேர்காணல் முறையில் நடைபெறும். மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 21ம் தேதி, காலை 9.00 மணிக்கு விண்ணப்பபடிவத்தை அனுப்பியிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மைனிங் மேட் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.38,881 சம்பளமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ucil.gov.in அதிகாரபூர்வ இணையதளம் அல்லது Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

UCIL Recruitment

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago