job news
லட்சத்தில் சம்பளம்..’BECIL’ நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை..! உடனே விண்ணப்பியுங்கள்..!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிக்கு ஆள்சேர்ப்புக்காக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் BECIL -ல் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
BECIL நிறுவனம் காலியாக உள்ள நிர்வாகி மற்றும் மூத்த நிர்வாகி பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தமாக 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 60 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு Notification-ஐ கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பதாரர் தகுதி:
- விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- பத்திரிகை / சமூக ஊடகம் / உள்ளடக்கம் எழுதுதல் ஆகிய துறைகளில் குறைந்தது 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் www.becil.com என்ற இணையதளத்தின் மூலம் Application ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும்.
- ஒரு விண்ணப்பதாரரிடம் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி இல்லையென்றால், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் தனது புதிய மின்னஞ்சல் ஐடியை உருவாக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் நிற புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை, கையொப்ப ஸ்கேன் நகலைப் பதிவேற்ற வேண்டும்.
- தங்களது சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் பதிவேற்றப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை பதிவு செய்வதற்கு முன் கவனமாக படிக்கச் வேண்டும்.
- பிறகு விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/ ஓபிசி/ முன்னாள் படைவீரர்/ பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.885 செலுத்த வேண்டும். SC/ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.531 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் குறித்து மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். மேலே உள்ள தகுதி அளவுகோல்களின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே திறன் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
நிர்வாகி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.1 லட்சமும், மூத்த நிர்வாகி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.1.5 லட்சமும் சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 7ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.