Categories: job news

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்..! விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு..!

விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தேசிய வங்கி (NABARD) நயா ராய்ப்பூரில் அமைந்துள்ள அதன் பிராந்திய அலுவலக கட்டிடத்தில் உள்ள NABARD-ன் மருந்தகங்களுக்காக, ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள வங்கியின் மருத்துவ அதிகாரி(பி.எம்.ஓ) பதவிக்கு ஆள்சேர்ப்புக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், விவசாயம் மற்றும் கிராம அபிவிருத்திக்கான தேசிய வங்கி வெளியிட்டுள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் தகுதி:

  • விண்ணப்பதாரர் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்தின் அலோபதி மருத்துவ அமைப்பில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்ற வேட்பாளர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரருக்கு மருத்துவ பயிற்சியாளராக எந்தவொரு மருத்துவமனை அல்லது கிளினிக்கிலும் குறைந்தபட்சம் 2 (இரண்டு) ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது மற்றும் பணியிடங்கள்:

வங்கியின் மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு ஆட்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம். வங்கியின் மருத்துவ அதிகாரி காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த பணியில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
  • பிறகு விண்ணப்பப் படிவத்தில் கேட்டகப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு என அனைத்து அத்தியாவசியத் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பணிக்கு தேவையான தகுதி, அடையாள சான்று, முகவரி விவரங்கள், அடிப்படை விவரங்கள் என அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும்.
  • பின், விண்ணப்பத்தை ஒரு கவரில் ‘பி.எம்.ஓ பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில்’ என்று எழுதி அனுப்பப்பட வேண்டும்
  • இந்த விண்ணப்பம் வேளாண் மற்றும் கிராம அபிவிருத்திக்கான தேசிய வங்கியின் தலைமை பொது மேலாளரை அடைய வேண்டும்.
  • அனுப்ப வேண்டிய முகவரி சத்தீஸ்கர் பிராந்திய அலுவலகம், அனன்யா, பிளாட் எண் 01, பிரிவு -24, சென்ட்ரல் பார்க், அடல் நகர், நயா ராய்பூர் -492018.

தேர்வு முறை: 

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.

சம்பள விவரம்:
வங்கியின் மருத்துவ அதிகாரி பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியமாக வழங்கப்படும்.
கடைசி தேதி:

நீங்கள் அனுப்பும் விண்ணப்பங்கள்  ஜூன் 16 அன்று அல்லது அதற்கு முன்னர் அலுவலகத்தை வந்தடைய வேண்டும்.

Web Desk

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

6 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

6 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

6 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

6 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

6 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

7 hours ago